(ஆர்.ராம்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று முற்பகல் தற்போது நிலவுகின்ற விடயங்கள் குறித்து பல கலந்துரையாடல்கள் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளன.
அதனடிப்படையில், முதற்கட்ட கலந்துரையாடலில் நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் மத்திய வங்கி ஆளுநர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் சர்வதேச நாயண நிதியத்துடனான பேச்சுக்களை நாளையதினம் முன்னெடுக்கவுவுள்ள நிலையில் அதுபற்றி முதலில் அவதானம் செலுத்தப்பட்டது.
விசேடமாக, சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் நாணய நிதியத்தின் நிபந்தனைகள், அதனிடமிருந்து விரைவாக நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனைவிடவும், இந்திய நிதி அமைச்சின் அதிகாரிகளுடனான பேச்சுகளின்போதான விடயங்கள் குறித்தும் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடத்தில் மேலதிகமாக கோரப்பட்டுள்ள முறையே இரண்டு பில்லியன் டொலர்கள் மற்றும் 1.5பில்லியன் டொலர்கள் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.
அதேநேரம், உள்நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் சமயல் எரிவாயு நெருக்கடிகளுக்கு தீர்வு காணும்பொருட்டு உரிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய நிதி அமைச்சரிடத்தில் தெரிவித்தார்.
அதன்போது, மத்திய வங்கி ஊடாக அவ்விடயங்களை கையாள்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பதிலளித்தார்.
தொடர்ந்து அத்தியாவசிப்பொருட்களுக்கான நிரந்தர வழங்கலை உறுதிப்படுத்துவதற்கான ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி நிதி அமைச்சரிடத்தில் வலியுறுத்தினார்.
மேலும் வெளிநாட்டுக்கடன்களை தற்போதை மீளச் செலுத்த முடியாது என்ற அறிவிப்பு செய்யப்பட்டள்ள போதும்ரூபவ் ஏனைய வெளிநாட்டு கடன்களை மீளச் செலுத்துவது பற்றிய
மீளாய்வினை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி நிதி அமைச்சினை கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், உள்நாட்டு கடன்களையும்ரூபவ் நிதிநிலைமைகளையும் சீராகப் பேணுவதற்கு உள்நாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் கூட்டிணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி நிதி அமைச்சரை கோரியுள்ளார்.
அத்துடன் , புதிய அமைச்சரவை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக புதிய அமைச்சரவையில் ராஜபக்ஷ குடும்பத்தினர் அல்லாதவர்கள் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு ஏலவே அமைச்சுப்பதவிகளை வகிக்கின்ற மற்றும் வகித்தவர்கள் தொடர்பிலான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், அமைச்சர் ஜோன்சன் பெர்ணான்டோ, மற்றும் முன்னாள் அமைச்சர்களான எஸ்.எம்.சந்திரசேன, ரோஹித்த அபேகுணவர்த்தன ஆகியோருக்கு கடுமையான எதிர்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அமைச்சர் ஜோன்சன் பெர்ணான்டோ ஆளும் தரப்பின் பிரதம கொறடாவாக இருந்தமையால் அவருக்கு மீண்டும் அமைச்சுப்பதவி வழங்கப்பட்டதாக ஜனாதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சந்திப்பில் தான் பற்றி உரையாடலை அறிந்த ஜோன்சன் பெர்ணான்டோ தான் அமைச்சுப்பதவியில் இருந்து நீங்கப்போவதில்லை என்று தனக்கு நெருங்கியவர்களிடத்தில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலுசக்தி, கல்வி, மற்றும் சுகாதார அமைச்சுக்களின் அதிகாரிகளுடன் மற்றுமொரு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அக்கலந்துரையாடல்களின்போது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை மீளத்திறத்தல் மற்றும் இந்திய நிதியுதவியின் கீழ் மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்தலை துரிதப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், பாடசாலைகளுக்கு எந்தவொரு இடையூறுகளுமின்றி தொடர்ச்சியாக இயங்கிச் செல்வதற்கான சூழலை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, நாட்டை ஒருவார காலத்திற்கு முழுமையாக முடக்கி நிலைமைகளை சுமுகமாக்குவதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்கலாம் என்பது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கலந்துரையாடல்களின் போது யோசனை முன்வைக்கப்பட்டபோதும் அதுகுறித்து எவ்விதமான இறுதி தீர்மானங்களும் இச்செய்தி வெளியாகும் வரையில் எடுக்கப்பட்டதாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM