bestweb

உத்தேச 2.5 பில்லியன் டொலர் கடன் கோரிக்கையுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை சீனா  முடிச்சிட்டுள்ளதா ?

16 Apr, 2022 | 08:42 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

சீனாவிடமிருந்து 2.5 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை கடனாக கோரியுள்ளது. 

இந்த கோரிக்கைக்கு சாதகமான நகர்வுகள் பெய்ஜிங் காணப்படுவதாக அங்கிருக்கும் இலங்கை தூதுவர் பாலித கோஹண தெரிவித்துள்ளார். 

இந்த 2.5 பில்லியன் டொலரில் 1 பில்லியன் டொலரை சீனாவிடமிருந்து ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்ட கடனுக்கான ஜுலை மாத மீள் செலுத்தல் தொகைக்காக பயன்படுத்த உள்ளதுடன் எஞ்சிய 1.5 பில்லியன் டொலரை இலங்கை கடன் தொகையாக பெற்றுக்கொள்ளும் என கூறப்படுகின்றது.

 எவ்வாறாயினும் இந்த கடன் தொகை கிடைக்கைப்பெறும் கால வரையறை இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

 அத்துடன் சர்வதேச கடன்களை மீள செலுத்துவதை மத்திய வங்கி உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தியுள்ளதால் ஏற்படக்கூடிய நெருக்கடிகள் குறித்தும் பல தரப்புகள் இலங்கையை எச்சரித்து வருகின்றன.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்டகாலமாக தடைப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த  பேச்சுவார்த்தைகளை மீண்டும் சீனா ஆரம்பித்துள்ளது. 

இலங்கை தற்போது கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் இலங்கையுடனான தடைப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது கால சிறந்தது எனக் கூறி சீன தரப்புகள் நம்பிக்கையூட்டி வருகின்றன.

இலங்கையில் ஏற்கனவே துறைமுகங்கள், சர்வதேச விமான நிலையம், அனல் மின்நிலையம், பெருந்தெருக்கள் மற்றும் ஹோட்டல்கள் என பல்வேறு உட்கட்டமைப்பு கட்டுமானங்கள் சீனாவின் முதலீட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

ஆனால்  இந்த முதலீடுகள் நேரடி வர்த்தக - இருதரப்பு கொடுக்கல் வாங்கலாக இன்னும் முன்னேற்றம் அடையவில்லை.

மறுபுறம் இலங்கையின் முக்கிய இறக்குமதி மூலாதாரமாக உள்ள சீனா, இலங்கையின்  ஏற்றுமதிகளுக்கு  பாரியதொரு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை வைக்க இயலாது.  

மறுப்புறம் சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டால் அது இந்திய சந்தையைக் கடுமையாகப் பாதிக்கும்.  

சீனாவைப் பொருத்தவரையில் இலங்கையுடனான பொருளாதார உறவுகள் மூலம் அந்நாட்டிற்கு கிடைக்கும் அரசியல் நன்மைகளே அதிகமென பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுகின்றனர். 

அந்தவகையில், இதனை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தும் வகையில் சீனா மீண்டும் இரு தரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து கொழும்புடன் பேச்சுவார்த்தைகளை மிகவும் அமைதியான முறையில் முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தேச 2.5 பில்லியன் டொலர் கடன் கோரிக்கையுடன் இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்த விவகாரத்தை பெய்ஜிங் முடிச்சிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இது குறித்த  நகர்வுகளை மிகவும் இரகசியமாக முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், பல்வேறு இணக்கப்பாடுகளுடன்  இந்தியாவிடம் இலங்கை ஒத்துழைப்புகளை பெற்றுவருகின்றது. 

அண்மையில் மேலும் 2 பில்லியன் டொலரை இந்தியாவிடம் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இலங்கை தரப்புகள் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா - கூமாங்குளத்தில் இடம்பெற்ற வன்முறைச்...

2025-07-19 01:23:07
news-image

தென்மேற்கு பருவமழை தீவிரம் : பல...

2025-07-19 01:20:20
news-image

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர்...

2025-07-19 01:11:43
news-image

முச்சக்கரவண்டி மற்றும் கார் மோதி விபத்து:...

2025-07-19 01:09:10
news-image

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர்

2025-07-19 00:54:25
news-image

யாழ்ப்பாணத்தில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயற்சிகள் வழங்க...

2025-07-18 21:25:41
news-image

மருந்துகளைப் பெற வைத்தியசாலைகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது...

2025-07-18 19:28:23
news-image

மருந்தாளுநர்களின் பற்றாக்குறைக்கு தீர்வு காண திட்டமொன்று...

2025-07-18 20:29:55
news-image

விடுதலைப் புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது...

2025-07-18 19:30:03
news-image

புதிய கல்வி மறுசீரமைப்பு முறைமைக்கு ஆசிரியர்...

2025-07-18 16:53:19
news-image

கொழும்புத் திட்டத்தின் 74வது ஆண்டு விழாவில்...

2025-07-18 19:19:10
news-image

அரச சேவையாளர்கள் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்துடன்...

2025-07-18 17:42:16