(என்.வீ.ஏ.)
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக மும்பை ப்றேபோர்ன் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (15) இரவு நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் வெற்றியீட்டிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத், நடப்பு பருவகாலத்தில் தொடர்ச்சியான 3ஆவது வெற்றியைப் பதிவுசெய்தது.
தங்கராசு நடராஜனின் சிறப்பான பந்துவீச்சு, ராகுல் திரிபாதி, ஏய்டன் மார்க்ராம் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள் என்பன சன்ரைசர்ஸ் ஹைதராபத்துக்கு அவசியமான வெற்றயை ஈட்டிக்கொடுத்தன.
இப் போட்டி முடிவை அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (6 புள்ளிகள்) மேலும் 5 அணிகளுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளது. ஆனால், நிகர ஓட்ட வித்தியாச அடிப்படையில் 7ஆம் இடத்தில் இருக்கின்றது. இந்த வருடம் முதல் தடவையாக ஐபிஎல் அத்தியாயத்தில் விளையாடும் குஜராத் டைட்டன்ஸ் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கின்றது.
176 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 17.5 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.
ஆரம்ப வீரர் அபிஷேக் ஷர்மா (3) ஆட்டமிழந்ததும் களம் நுழைந்ந ராகுல் த்ரிபாதி, தனது முன்னாள் அணிக்கு எதிராக அதிரடியாக ஓட்டங்களைப் பெற ஆரம்பித்தார்.
மறுபுறத்தில் தடுமாற்றத்துக்கு மத்தியில் துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 17 ஓட்டங்களுடன் வெளியேறினார். (39 - 2 விக்.)
இந் நிலையில் ஜோடி சேர்ந்த த்ரிபாதியும் ஏய்டன் மார்க்ராமும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 94 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
37 பந்துகளை எதிர்கொண்ட த்ரிபாதி 6 சிக்ஸ்கள், 4 பவுண்டறிகளுடன் 71 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தபோது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் வெற்றிக்கு 32 பந்துகளில் மேலும் 34 ஓட்டங்களே தேவைப்பட்டது.
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க்ராம் 36 பந்துகளில் 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியை உறுதிசெய்தார். நிக்கலஸ் பூரன் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சில் அண்ட்றே ரசல் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் (28), நிட்டிஷ் ரானா (54), அண்ட்றே ரசல் (49 ஆ.இ.) ஆகியோரே திறமையாகத் துடுப்பெடுத்தாடினர்.
ஆரொன் பின்ச், வெங்கடேஷ் ஐயர் உட்பட 7 துடுப்பாட்ட வீரர்களால் இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்ட முடியாமல் போனது.
ஹைதராபாத் பந்துவீச்சில் தங்கராசு நடராஜன் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் உம்ரன் மாலிக் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM