( எம்.எப்.எம்.பஷீர்)
புத்தாண்டு தினத்தில் பதிவாகும் திடீர் விபத்துகளின் எண்ணிக்கை 4 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்தது.
புத்தாண்டு தினத்தில் பல்வேறு விபத்துகளில் காயமடைந்த 167 பேர் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளனர்.
118 ஆண்களும் 49 பெண்களும் இவ்வாறு சிகிச்சைகளுக்காக வருகை தந்ததாகவும் அவர்களில் 72 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இது கடந்த வருடத்துடன் ஒப்பீடும் போது 4 வீதம் குறைவடைந்துள்ளதை காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த வருடம் புத்தாண்டு தினத்தில் 5 பட்டாசு கொளுத்துவதால் ஏற்பட்ட தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், இவ்வாண்டு ஒரேயொரு சம்பவமே இடம்பெற்றுள்ளதாக அந்த பேச்சாளர் கூறினர்.
இம்முறை புத்தாண்டு தினத்தில் கைகலப்புக்களால் ஏற்பட்ட காயங்கள் காரணமாக 27 பேரும், வீழ்ந்து காயமடைந்தமையால் 46 பேரும், வீட்டில் ஏற்பட்ட விபத்துக்களால் 20 பேரும் காயமடைந்து சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். .
புத்தாண்டு தினத்தில் வீதி விபத்துகளில் காயமடைந்த 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ( வீதி விபத்துக்கள் ) கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 11 வீத அதிகரிப்பாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM