தலைவர் பதவியிலிருந்து விலகினார் ஜோ ரூட்

15 Apr, 2022 | 05:46 PM
image

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவராக இருந்த ஜோ ரூட் தனது தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்தது. 

இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஜோ ரூட் அறிவித்துள்ளார்.

இறுதியாக நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரை 0-4 என்ற கணக்கில் பறிகொடுத்த  இங்கிலாந்து அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-1 என்ற கணக்கில் இழந்தது.

கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் பட்டியலில் ஜோ ரூட்டே முன்னிலையில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது,

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்