அமைச்சு பதவிகளிலிருந்து விலகியவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட சந்திப்பு - எஸ்.பி.திஸாநாயக்க

Published By: Digital Desk 5

15 Apr, 2022 | 06:14 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கூட்டாக அமைச்சு பதவிகளில் இருந்து விலகியவர்களுக்கும், ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று (15.04.2022) மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையினை எதிர்வரும் வாரத்திற்குள் ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண இடைக்கால அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை பிரதான எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் அரசியல் மட்டத்திலான அடுத்தக்கட்ட நகர்வு குறித்து அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய சகல அமைச்சர்களும் கடந்த 3 ஆம் திகதி அமைச்சு பதவிகளை துறந்தோம்.

நாடு எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வுகாண ஒத்துழைப்பு வழங்கும் நோக்கம் எதிர்தரப்பினருக்கு கிடையாது. தற்போது நெருக்கடியினை தீவிரப்படுத்தி அதனூடாக அரசியல் இலாபம் தேடிக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் நிலையான அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஜனாதிபதியுடன் இன்று விசேட பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம். பாராளுமன்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு தான் தற்போதும் பெரும்பான்மை பலம் உள்ளது.

புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டிய தேவை கிடையாது. பெரும்பாலான உறுப்பினர்கள் இடைக்கால அரசாங்கத்திற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையை எதிர்வரும் காலத்திற்குள் ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19