மெட்ராஸ் படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை ரித்விகா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதில் அழகு குட்டி செல்லம் என்ற படமும் ஒன்று. இது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நீயா நானா புகழ் அண்டனி தயாரிக்கும் படம் ஆகும். 

இதில் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்து வாழும் பெண்ணாக நடிக்கிறார் ரித்விகா. இவருக்கு ஜோடியாக நடிக்கிறார் கல்லூரி புகழ் நாயகன் அகில். 

இது குறித்து அவரிடம் கேட்டபோது, படத்தின் இயக்குநர் சார்லஸ் எம்மை அணுகி, இது போல் ஒரு வேடம் என்றவுடன் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். ஆனால் இயக்குநர் ஒரு நிபந்தனை விதித்தார். படப்பிடிப்பு தளத்திலும், டப்பிங்கிலும் நீதான் இலங்கைத் தமிழில் பேச வேண்டும் என்றார். முதலில் யோசித்த நான் பிறகு சம்மதித்தேன். இதற்கான உதவியையும் இயக்குநரே அளித்தார். ஒருவரின் துணைக்கொண்டு இலங்கை தமிழில் பேசி நடித்திருக்கிறேன். படம் எதிர்வரும் மாதம் வெளியாகவிருக்கிறது. 

ரித்விகாவிற்கு நம் சார்பாக வாழ்த்துத் தெரிவித்து விடைபெற்றோம்.