கால் விரல்களை விட கைவிரல் நகங்கள் விரைவாக வளர்வது ஏன் ?

By Digital Desk 5

15 Apr, 2022 | 03:05 PM
image

எம்மில் பலரும் தங்களின் உடல் ஆரோக்கியம் குறித்து மருத்துவர்களுடன் இணைய வழியிலேயே உரையாடி, தங்களுக்கான சிகிச்சையை பெற்றுக்கொள்கிறார்கள்.

இந்நிலையில் மருத்துவர்கள் கிளினிக்கல் டயாக்னைஸ் எனப்படும் பரிசோதனைகளை இணைய வழியிலேயே மேற்கொள்கிறார்கள்.

இதன்போது அவர்கள் நோயாளிகளின் கைவிரல் நகங்களை காண்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள். ஏனெனில் எம்முடைய கைவிரல் நகங்கள் ஆரோக்கியத்தின் அறிகுறியாக திகழ்கின்றன.

இந்நிலையில் எம்மில் சிலருக்கு கால் விரல் நகங்களை விட, கைவிரல் நகங்கள் அதிவிரைவாக வளர்கிறதே ஏன்? என சந்தேகம் கொள்கிறார்கள். இதற்கான விடையை மருத்துவ நிபுணர்கள் பின்வருமாறு விவரிக்கிறார்கள்.

ஒவ்வொருவருடைய கைவிரல்களில் உள்ள நகங்கள், இறந்த செல்களிலிருந்து வெளியேறும் புரதச்சத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன.

எம்முடைய கை விரல்களில் உள்ள நகங்கள் முழுமையாக வளர்ச்சியடைவதற்கு மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை கால அவகாசம் எடுத்துக்கொள்கிறது.

ஆனால் கால் விரல் நகங்கள் ஒருமுறை முழுமையாக வளர்ச்சியடைவதற்கு ஆறு முதல் ஓராண்டு காலம் வரை கால அவகாசம் எடுத்துக் கொள்கிறது.

இதன் பின்னணியில் மூன்று மருத்துவ ரீதியிலான காரணங்கள் உள்ளன. கால் விரல்களை விட, கை விரல்களுக்கு ரத்த ஓட்டம் அதிகமாகவும், செறிவாகவும் நடைபெறுகிறது.

இரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதால் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஓக்சிஜன் கைவிரல் நகங்களுக்கு கால் விரல் நகங்களை விட கூடுதலாகக் கிடைக்கிறது.

பருவநிலை மாற்றத்தின் போது குறிப்பாக குளிர்காலத்தில் கால் மற்றும் கால் விரல்கள் பகுதியில் நகங்களின் வளர்ச்சியும், அதன் பயன்பாடும் மிக குறைவாகவே இருக்கிறது.

மேலும் எம்மில் பெரும்பாலானவர்கள் கால் விரல்களை பயன்படுத்துவதைவிட கூடுதலாக கைவிரல்களை உபயோகிப்பதால் அதன் இயக்கம் இயல்பான அளவைவிட கூடுதலாக இருக்கிறது.

இத்தகைய காரணங்களால் தான் கால் விரல்களை விட கை விரல்களில் நகங்கள் விரைவாக வளர்கிறது. அதே தருணத்தில் கை விரல்களின் நகங்களில் வளர்ச்சிக்கு பயோட்டின் எனப்படும் சத்து அவசியம் என்பதையும், இந்த சத்துள்ள உணவுகள் அதிகம் உண்பதால் கைவிரல் நகங்கள் ஆரோக்கியத்துடன் வளர்ச்சி அடையும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

டொக்டர். தீப்தி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right