தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி வளர்ந்து வரும் மூன்று இளம் நாயகிகள் கதையின் நாயகிகளாக நடிக்கும் புதிய படத்திற்கு ராட் ( RAT) என பெயரிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய் இயக்கத்தில் தயாராகிவரும் திரைப்படம் 'ராட்'. இதில் நடிகைகள் ரேஷ்மா வெங்கட், சாயாதேவி, கன்னிகா ரவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இந்தப்படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் கௌரவ வேடத்தில் நடிக்கிறார் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சீனிவாஸ் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு அஸ்வின் ஹேம்நாத் இசை அமைக்கிறார். ஆம்ரோ சினிமாஸ் என்ற நிறுவனம் சார்பில் திருமதி முத்துலட்சுமி ராஜராஜன் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' சமூகத்தில் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கும் டிஜிட்டல் வடிவ கந்துவட்டியை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைக்கதை. மூன்று பெண்கள் வெவ்வேறு வடிவங்களில் டிஜிட்டல் கந்து வட்டி கொடுமைக்கு ஆளாகிறார்கள். அதிலிருந்து அவர்களால் தப்பிக்க முயன்றதா? இல்லையா? என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறோம்.'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM