ராஜஸ்தான் றோயல்iஸ வீழ்த்தியது குஜராத் டைட்டன்

By Digital Desk 5

15 Apr, 2022 | 11:41 AM
image

(என்.வீ.ஏ.)

ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிராக புனே டி.வை. பட்டில் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (14) நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் அணித் தலைவர் ஹார்திக் பாண்டியாவின் சகலதுறை ஆட்டம் குஜராத் டைட்டன்ஸுக்கு 37 ஓட்ட வெற்றியை ஈட்டிக்கொடுத்தது.

இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் இந்த வெற்றியுடன் 4 வெற்றிகளைப் பதிவு செய்து அணிகள் நிலையில் 8 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகிய மூன்று துறைகளிலும் ஹார்திக் பாண்டியா வெளிப்படுத்திய அற்புதமான ஆற்றல்கள், அவருக்கு ஆட்டநாயகன் விருதைப் பெற்றுக்கொடுத்தது.துடுப்பாட்டத்தில் 52 பந்துகளில் 8 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்களைக் குவித்த பாண்டியா, பந்துவீச்சில் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியதுடன் களத்தடுப்பின்போது ரன் அவுட் ஒன்றிலும் பங்காற்றியிருந்தார்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸுக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

மெத்யூ வேட் (12), விஜே ஷங்கர் (2), ஷுப்மான் கில் (13) ஆகிய மூவரும் ஆட்டமிழக்க, குஜராத் டைட்டன்ஸின் மொத்த எண்ணிக்கை 53 ஓட்டங்களாக இருந்தது.இந் நிலையில் ஹார்திக் பாண்டியாவும் அபினவ் மனோகரும் ஜோடி சேர்ந்து அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 55 பந்துகளில் 86 ஓட்டங்களைப் பகிர்ந்து குஜராத் டைட்டன்ஸை பலப்படுத்தினர்.

அபினவ் மனோகர் 28 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 43 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.தொடர்ந்து பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லரும் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 14 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 31 ஓட்டங்களைப் பெற்றதுடன் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

குல்தீப் சென், யுஸ்வேந்த்ர சஹால், ரியான் பரக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய போதிலும் அவர்களது பந்துவீச்சுகளில் கணிசமான ஓட்டங்கள் பெறப்பட்டிருந்தன.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

முதல் 2 ஓவர்களில் 28 ஓட்டங்களைக் குவித்த ராஜஸ்தான் றோயல்ஸ் அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து தோல்வி அடைந்தது.ஆரம்பவீரர் தேவ்தத் படிக்கல் (0), துடுப்பாட்டத்தில் தரமுயர்த்தப்பட்ட ரவிச்சந்திரன் அஷ்வின் (8) ஆகிய இருவரும் பிரகாசிக்கத்தவறினர்.

மொத்த எண்ணிக்கை 65 ஓட்டங்களாக இருந்தபோது ஜொஸ் பட்லர் 3ஆவதாக ஆட்டமிழந்தார். இந்த மொத்த எண்ணிக்கையில் பட்லர் தனி ஒருவராக 54 ஓட்டங்களைப் பெற்றார். 24 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களை விளாசியிருந்தார்.அவரைத் தொடர்ந்து சஞ்சு செம்சன் (11), ரசி வென் டேர் டுசென் (6) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தமை அணிக்கு மேலும் நெருக்கடியைக் கொடுத்தது.

ஷிம்ரன் ஹெட்மயர் (29), ரியான் பரக் (18), ஜேம்ஸ் நீஷாம் (17) ஆகிய மூவரும் சுமாரான திறமையை வெளிப்படுத்தியபோதிலும் அவர்களால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியாமல் போனதுடன் பின்வரிசையிலும் எவரும் பிரகாசிக்கவில்லை.பந்துவீச்சில் லொக்கி பெர்கசன் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் யாஷ் தயாள் 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் உலகக் கிண்ண இலங்கை குழாத்தில்...

2023-02-01 18:31:57
news-image

வார இறுதியில் இலங்கை மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்டம்

2023-02-01 18:36:17
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக், பராலிம்பிக் அதிகாரி...

2023-02-01 14:38:17
news-image

விசா பிரச்சினை காரணமாக கவாஜாவின் இந்திய...

2023-02-01 13:35:40
news-image

உலகக் கிண்ணத்திற்கான நேரடி தகுதியைக் குறிவைத்து...

2023-02-01 12:27:41
news-image

உலகக் கிண்ணத்தை 3ஆவது தொடர்ச்சியான தடவையாக...

2023-01-31 20:22:35
news-image

பங்களாதேஷ் அணியின் பயிற்றுநராக மீண்டும் சந்திக்க...

2023-01-31 16:19:24
news-image

நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதவன்...

2023-01-31 13:48:55
news-image

ஹிமாஷவின் போட்டித் தடை 6 ஆண்டுகளாக...

2023-01-31 15:26:53
news-image

19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20...

2023-01-31 09:59:01
news-image

இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா உலகக் கிண்ணத்தில்...

2023-01-31 09:45:22
news-image

கனிஷ்ட உலகக் கிண்ணத்துடன் சிரேஷ்ட உலகக்...

2023-01-30 22:27:12