( எம்.எப்.எம்.பஸீர்)
நீதிமன்றை அவமதித்தமைக்காக 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அத்தண்டனையயை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை இன்று (14) புத்தாண்டு இனிப்புக்கள் மற்றும் பரிசுப் பொதியுடன் சென்று பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பார்வையிட்டனர்.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று முற்பகல் புத்தாண்டு நன்னேரத்தில் சென்ற குறித்த இருவரும் ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்து நலன் விசாரித்த பின்னர் ஊடகங்களிடம் பேசினர்.
இதன்போது மனுஷ நாணயக்கார எம்.பி. கருத்து தெரிவிக்கையில்,
' நாம் எமது சகோதரன் ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்தோம். இம்முறை நாட்டில் வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டங்கள் இல்லாத நிலையில், போராட்டங்களில் ஈடுபடுவோரை மனதார வாழ்த்துகின்றோம்.
எமக்கும் அந்த போராட்டங்களில் பங்கேற்க விருப்பம் உள்ளது. எனினும் அப்போராட்டங்களுக்கு கட்சி, நிற அடையாளங்கள் பூசப்படக் கூடாது என்பதால் பங்கேற்காமல் இருக்கின்றோம்.
எனினும் எமது பூரண ஆதரவு போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு உள்ளது. புதிதாக சிந்திக்கும், புதிய தலைமுறையை நாம் வாழ்த்துகின்றோம்.
ரஞ்சன் சிறையில் தற்போது மிக்க நலமாக தெம்புடன் இருக்கின்றார். அவருக்கு நந்தசேன ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தேவை இல்லை என அவர் குறிப்பிட்டார்.
நிதி மோசடிகளுடன் தொடர்புடைய 82 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த குற்றமும் செய்யாது ரஞ்சன் தண்டனை அனுபவிக்கின்றார்.
காலி முகத்திடல் போராட்டக்களத்தில் பாடகி நத்தா மாலினி கேட்ட கேள்வியான, குற்றவாளிகள் விடுதலையாவார்களாயின் எதற்கு இந் நாட்டின் சட்டம் ? எதற்கு இந் நாட்டின் நீதிமன்றங்கள் ? ' என்றே கேட்க வேண்டியுள்ளது.' என தெரிவித்தார்.
ஹரீன் பெர்னாண்டோ எம்.பி. கருத்து தெரிவிக்கையில்,
' ரஞ்சனுக்கு இன்னும் 6 மாதங்களே சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டியுள்ளது. அதனை அவர் அனுபவிப்பதாகவும் ஜனாதிபதி பொது மன்னிப்பு தேவை இல்லை எனவும் தெரிவித்தார். அத்துடன் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் அவர் இதயபூர்வமான வாழ்துக்கள் .' என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM