(எம்.ஆர்.எம்.வசீம்)
நாடு எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணடியுமாக இருப்பது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைவதன் மூலமாகும்.
அதனால் அனைவரும் பேதங்களை புறந்தள்ளிவிட்டு ஒன்றுபட்டு அணிதிறண்டு தாய்நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிக்க முன்வர வேண்டும் என கொழும்பு மாநகரசபை மேயர் ரோஷி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாணவேண்டியதன் அவசியம் குறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாடு எதிர்கொண்டுள்ள தீர்மானமிக்க இந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைவரும் பேதங்களை புறந்தள்ளிவிட்டு ஒன்றுபட்டு அணிதிறண்டு தாய்நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிக்கவேண்டும்.
நாடு எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணடியுமாக இருப்பது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைவதன் மூலமாகும்.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் பொதுவான இணக்கப்பாட்டுக்காக நம்பிக்கையுடன் கைகோர்த்துக்கொண்டு உறுதியான முன்னெடுப்பொன்றை பெற்றுக்கொண்டு முன்னுக்கு செல்வதா இல்லாவிட்டால் அச்சப்பட்டு, நெல் விதைப்பதுபோல் அங்கும் இங்குமாக செயற்படுவதா என அனைவரும் தற்போது தீர்மானிக்கவேண்டும்.
எதிர்க்கட்சியின் கடமையை நிறைவேற்றுவதற்கு பதிலாக மேலும் அரசியல் முகாம்களில் இருந்துகொண்டு செயற்படுவதா என்பதை தீர்மானிக்கவேண்டும்.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பது இரண்டு கட்சிகள் அல்ல. ஒரே குடும்பத்தில் இருந்து பிரிந்துசென்ற சகோதரர்கள் உடைய அரசியல் சக்தியாகும் என்பதை அந்த கட்சிகளின் தலைவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.
சந்தர்ப்பவாதம் மற்றும் தூரநோக்கற்ற அரசியல்வாதிகள் நாட்டின் தற்காலத்தை மாத்திரமல்லாது பிறக்காத வருங்கால சந்ததியைம் அவல நிலைக்கு தள்ளிவிட்டுள்ள, இவ்வாறான சந்தர்ப்பத்தில், எதிர்க்கட்சிக்கு இருக்கும் கைவிட முடியாத பொறுப்பை தட்டிக்கழிக்காமல் நிறைவேற்றவேண்டும்.
மேலும் உங்களை மக்கள் பிரதிநிதிகளாக நியமித்த மக்களை பட்டினியால் மரணிப்பதற்கு இடமளிப்பதா? இல்லாவிட்டால் அவர்களுக்காக கூட்டுப்பொறுப்புடன் அர்ப்பணிப்பதா என்ற தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் எடுக்கவேண்டும்.
அத்துடன் எதிர்காலத்தில் இலங்கை 7பில்லியன் டொலர்களை கடனாக செலுத்தவேண்டிய காரணத்தால் எமது நாடு மேலும் பாதிக்கப்படுவதை தடுக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM