பிரசன்ன விதானகேயின் “உசாவி நிஹண்டாய்” திரைப்படத்தின் தடையுத்தரவு நாளை (21) வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவினை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி எம்.யு. குணவர்தன பிறப்பித்துள்ளார்.

குறித்த திரைப்படம் தன்னை அவமானப்படுத்துவதாக தெரிவித்து, முன்னாள் நீதவான் லெனின் ரத்னாயக்க நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் திரைப்படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.