(எம்.எம்.சில்வெஸ்டர்)
நாட்டுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 7 நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேசியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
" இந்த கோரிக்கைக்கு அந்த நாடுகளிடமிருந்து ஏற்கனவே வெற்றிகரமான பதில் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தியக் கடன் சலுகைகளின் கீழ் மருந்துப் பொருட்கள் கிடைக்கப் பெற்று வருகின்றன.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இலங்கைக்கு மருந்துகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளனர் " என்றார்.