மட்டக்களப்பு  தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி ஊறணி பகுதிகளில் உள்ள  பலசரக்கு கடைகளில் சட்டவிரோதமாக பெற்றோல் வியாபாரத்தில் ஈடுபட்ட 3 பேரை 30 லீற்றர் பெற்றோல் உடன்  கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய குறித்த பகுதியிலுள்ள பலசரக்கு கடைகளை பொலிசார் முற்றுகையிட்டனர் இதன் போது சட்டவிரோதமாக பொற்றோல் வியாபாரத்தில் ஈடுபட்ட 3 கடை முதலாளிகளை கைது செய்ததுடன் 30 லீற்றர் பெற்றோலை மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்படடவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.