அப்பிள், திராட்சை, தோடம்பழம், யோகட் உள்ளிட்ட மேலும் 367 பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீடித்து விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல், கடந்த 9 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

உணவுப் பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் உள்ளிட்ட 367 பொருட்கள் இந்த வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அப்பிள், திராட்சை, தோடம்பழம், யோகட் உள்ளிட்ட மேலும் பல உணவுப்பொருட்களும், குளிரூட்டி, குளிர்சாதனப் பெட்டி, ஆடைகளை சுத்தம் செய்யும் இயந்திரம் உள்ளிட்ட பல இலத்திரனியல் பொருட்களும் அதில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.