வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையைத் தற்காலிகமாக இடைநிறுத்தியது அரசாங்கம்

12 Apr, 2022 | 04:44 PM
image

(நா.தனுஜா)

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்திருப்பதாகவும், வெகுவிரைவில் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளை வெளிநாட்டுக்கடன்களை மீளச்செலுத்துவதை இடைநிறுத்துவதன் மூலம் எஞ்சுகின்ற நிதியை அத்தியாவசியப்பொருட்களின் இறக்குமதிக்காகப் பயன்படுத்தவிருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தி நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையைப் பொறுத்தமட்டில் இலங்கையானது கடந்த 1948 ஆம் ஆண்டிலிருந்து சிறந்த மட்டத்தைப் பேணிவருகின்றது. 

இருப்பினும் கொவிட் - 19 வைரஸ் பரவல் மற்றும் உக்ரேன் மீதான படையெடுப்பு உள்ளடங்கலாக அண்மையகால நிகழ்வுகள் சிலவற்றால் இலங்கையின் நிதிநிலைமை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன், அதன் காரணமாக வெளிநாட்டுப் பொதுக்கடன்களை உரிய காலப்பகுதியில் மீளச்செலுத்தமுடியாத நிலையேற்பட்டுள்ளது. 

இலங்கையின் கடன் மீள்செலுத்துகை நிலைவரம் நிறைபேறற்றதாகக் காணப்படுவதாகக் கடந்த மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியம் மதிப்பீடு செய்திருந்தது. 

இருப்பினும் வெளிநாட்டுக்கடன் சார்ந்த கடப்பாடுகளை உரியவாறு பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்தது. 

ஆனால் அவற்றால் பயனில்லை என்பதுடன் செயற்திறன்மிக்க கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளவேண்டியது தற்போது மிகவும் அவசியமானதாக மாறியிருக்கின்றது.

இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்ட இலங்கை அரசாங்கம், பொருளாதார மீட்சி செயற்திட்டத்தைத் தயாரிப்பதற்கான அனுசரணையைப் பெற்றுக்கொள்வதற்கும் கடனுதவி பெறுவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தை நாடியது. 

அதுமாத்திரமன்றி இலங்கை அதற்கான ஏனைய நட்புநாடுகள் மற்றும் கட்டமைப்புக்களிடமும் உதவிகோரியிருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே நிலுவையிலுள்ள வெளிநாட்டுக்கடன்களின் மீள்செலுத்துகையைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பொருளாதாரமீட்சி செயற்திட்டத்தை தயாரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதேவேளை பொருளாதாரமீட்சிக்கான செயற்திட்டத்தைத் தயாரிப்பது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களை மேலும் விரிவுபடுத்துவதற்கும், கடன்களின் நிலைபேறானதன்மை குறித்த அனைத்து மதிப்பீடுகளையும் நிதியமைச்சின் இணையப்பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

அதேபோன்று வெளிநாட்டுக்கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இருதரப்பு மற்றும் வர்த்தகக் கடன் வழங்குனர்களுடன் நம்பிக்கையின் அடிப்படையிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

3 கோடி ரூபா பெறுமதியான போதைமாத்திரைகளை...

2024-04-14 12:51:19
news-image

யாழ் நகரின் சுகாதார நிலைமைகள் தொடர்பில்...

2024-04-14 12:21:07
news-image

வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் கொழும்பு, ஹம்பகா,...

2024-04-14 07:01:00
news-image

காலியிலிருந்து சுற்றுலா சென்றவர்களின் வேன் பண்டாரவளையில்...

2024-04-13 20:07:33
news-image

மருத்துநீர் வழங்கும் நிகழ்வு !

2024-04-13 19:55:36
news-image

மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...

2024-04-13 19:50:47
news-image

இன்று பிறக்கிறது குரோதி புதுவருடம் ! 

2024-04-13 15:44:56
news-image

உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட சந்தை...

2024-04-13 15:32:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக...

2024-04-13 15:33:20
news-image

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா சிறையிலிருந்த 10...

2024-04-13 15:28:49
news-image

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் வாள்கள், பொல்லுகளுடன்...

2024-04-13 15:09:06
news-image

இன்றைய வானிலை

2024-04-13 06:21:24