சாந்த பண்டார தனது அரசியல் வாழ்க்கையில் தற்கொலை - மைத்திரிபால சிறிசேன

Published By: Siddeque Kariyapper

12 Apr, 2022 | 04:28 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டு மக்களால் கடுமையாக வெறுக்கப்படும்  அரசாங்கத்தில் அமைச்சு  பதவியை பெற்று சாந்த பண்டார தனது அரசியல் வாழ்க்கையை தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இந்த அரசாங்கத்தில் அமைச்சு, இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிடுவதற்கு நான் தெளிவற்றவனாக இல்லை என  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மாவட்ட குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளராக பதவி வகித்த சாந்த பண்டார முன்னெடுத்த அரசியல் தீர்மானம் கவலைக்குரியது.

மக்களினால் முழுமையாக வெறுக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டு தனது அரசியல் வாழ்க்கையை சுயமாகவே கொலை செய்துள்ளார்.

எனக்கு அறிவித்ததன் பின்னர் தான் இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.

மக்களின் வெறுப்பை பெற்றுள்ள அரசாங்கத்தில் அமைச்சு,இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிடும் அளவிற்கு நான் தெளிவற்றவனாக இல்லை.

பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவின் மனநிலை குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

இராஜாங்க அமைச்சு பதவியை பொறுப்பேற்க முன் எனக்கு அறிவித்திருந்தால் வாகனத்தை அனுப்பி அவரை வரவழைத்து சிறந்த முறையில் எடுத்துரைத்திருப்பேன்.

தவறான தீர்மானங்களின் போது பிறரை அதனுடன் இணைத்து விடுவதை அவர் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலி மாவட்ட அரசாங்க அதிபர் பதவிக்கு...

2026-01-20 18:30:07
news-image

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள தேசிய கல்வி...

2026-01-20 18:19:13
news-image

இராஜகிரியவில் 300 வீடுகளை நிர்மாணிக்க அமைச்சரவை...

2026-01-20 17:52:25
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை...

2026-01-20 16:27:36
news-image

இலங்கை காப்புறுதி நிறுவன சட்ட மூலத்தை...

2026-01-20 17:29:24
news-image

களுவாஞ்சிக்குடியில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத மீன்கள்...

2026-01-20 17:30:24
news-image

பேஸ்லைன் வீதியை விரிவுபடுத்தும் திட்டத்தின் மூன்றாம்...

2026-01-20 16:45:08
news-image

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள்...

2026-01-20 16:34:05
news-image

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் கூட்டணியை...

2026-01-20 16:49:00
news-image

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர்...

2026-01-20 16:17:04
news-image

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ ஆகியோரின் மேன்முறையீட்டு...

2026-01-20 14:44:00
news-image

கிவுல்ஓயா அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க...

2026-01-20 16:33:11