(இராஜதுரை ஹஷான்)
தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண ஒன்றிணையுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை எக்கட்சிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை.
அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்ட தரப்பினரை ஒன்றிணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது சாத்தியமற்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவை ஸ்தாபிக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு,பாடசாலை உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு நாட்டு மக்களுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரம் மற்றும் சமூக பாதிப்பினை தேசிய பிரச்சினையாக கருதி நெருக்கடிக்கு தீர்வு காண ஒன்றினையுமாறு ஜனாதிபதி பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
ஜனாதிபதியின் அழைப்பினை பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளதை தொடரந்து நிலையான அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்ந்து பிற்போடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
கலைக்கப்பட்ட அமைச்சரவையில் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்தவர்கள் அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்தினார்கள்.
அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்ட தரப்பினரை ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைத்தால் அந்த அரசாங்கத்தையும் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியுமா என்ற சந்தேகம் தோற்றம் பெறும்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஸ்தீரமான அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
இடைக்கால அரசாங்கம் அமைப்பது சாத்தியமற்றது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இன்றும் உள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவை ஸ்தாபிக்கப்படும்.
சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் நிச்சயம் திர்வு பெற்றுக்கொடுக்கும்.
ஜனாதிபதி,பிரதமர் ஆகியோர் ஒருபோதும் பதவி விலகமாட்டார்கள் அரசாங்கம் பதவி காலம் நிறைவு பெறும் வரை ஆட்சியில் இருக்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM