சகோதரனை பாதுகாக்கவே மஹிந்த முயற்சி : விஜித ஹேரத்

12 Apr, 2022 | 02:42 PM
image

(எம்.மனோசித்ரா)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீது மக்கள் கொண்டிருந்த சிறிதளவு கௌரவத்தையும் தற்போது இழந்துள்ளார். 

அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் மூலம் போராடிக் கொண்டிருக்கின்ற இளைஞர்களின் கோரிக்கையை விளங்கிக்கொள்ளவில்லை என்பதும் , தனது சகோதரனை பாதுகாப்பதற்கே முயற்சித்தார் என்பதும் தெளிவாகிறது என்று தேசிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில்  12 ஆம் திகதி செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தற்போது எதிர்கொண்டுள்ள எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வினை வழங்கவில்லை. 

60 வருட அரசியல் அனுபவம் கொண்ட அவர் , சாதாரண பிரதேசசபை உறுப்பினர் ஒருவரை விடவும் மோசமாகவே உரையாற்றினார். 

அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் கோரிக்கையை சிறிதளவும் புரிந்துகொள்ளவில்லை என்பதும் தெளிவாகிறது, மாறாக அவரது சகோதரனைப் பாதுகாப்பதற்காகவே ஏனையோரை அச்சுறுத்தும் வகையில் உரையாற்றினார்.

அது மாத்திரமின்றி யுத்தத்தையும் , 1988 மற்றும் 1989 களில் இடம்பெற்ற வன்முறைகளையுமே அவர் நினைவுபடுத்தினார். 

கொவிட் தொற்று அனைத்திற்கும் காரணம் என்று கூறினார். அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டமைக்கான காரணம் கொவிட் பரவலா? 

பிரதமர் உரையாற்றியதன் பின்னர் மக்கள் மத்தியில் அவர் மீது காணப்பட்ட சிறிதளவு கௌரவத்தையும் இழந்துள்ளார்.

ராஜபக்ஷ குடும்பம் முழு நாட்டையும் சீரழித்துவிட்டு , தற்போது அதனை சரி செய்வதற்காக ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறது. 

ராஜபக்ஷாக்கள் அங்கத்துவம் வகிக்கும் அரசாங்கத்தில் ஒருபோதும் ஜே.வி.பி. அங்கத்துவம் வகிக்காது. 

கடந்த 3 ஆண்டுகளிலேயே இலங்கை வரலாற்றில் அதிகளவு கடன் பெறப்பட்டுள்ளது, நாட்டின் மொத்த கடனில் மூன்றில் ஒரு பங்கு கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் பெற்றுக் கொள்ளப்பட்டதாகும்.

தேசிய சொத்துக்களை சர்வதேசத்திடம் அடகு வைத்து இந்த கடனைப் பெற்றுள்ளனர், இந்த ஊழல் மோசடி மிக்க ராஜபக்ஷ குடும்பத்தை துரத்தியடித்து , மக்கள் ஆட்சியை ஸ்தாபிக்க வேண்டும். 

அது வரையில் போராட்டத்தை தொடர வேண்டிய நிலைமையே மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

இளைஞர்களின் ஆர்ப்பாட்டத்தின் பிரதிபலனாகவே முட்டாள்களான மத்திய வங்கி ஆளுனரையும் , நிதி அமைச்சரையும் பதவி நீக்க முடிந்தது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01