.

டுபாயில் புதிதாக திருமணமான நபர், தன் மனைவியை மேக்கப் இல்லாமல் பார்த்து அடையாளம் தெரியவில்லை என்று விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளார்.

டுபாயில் புதிதாக திருமணமான நபர், தனது மனைவியுடன் கடற்கரைக்கு சென்றுள்ளார். குளித்துவிட்டு வந்த மனைவியின் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அளவு அதிகமாக மேக்கப் சாதனங்கள் பயன்படுத்தி தன்னை ஏமாற்றி விட்டதாகவும், தற்போது உண்மையான முகத்தை கண்டு அவருக்கு அடையாளம் தெரியவில்லை என்று மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்.

இதில் மனமுடைந்த அந்த பெண் உளவியல் மருத்துவரை அனுகியுள்ளார். இதுகுறித்து அந்த மருத்துவர் கூறியதாவது,

அந்த பெண் திருமணத்திற்கு முன்பே பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததை மறைத்து திருமணம் செய்துள்ளார். மேக்கப் போட்டு உண்மையான முகத்தை மறைத்து வந்த பெண், தன் கணவரிடம் பலமுறை உண்மையை சொல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் இப்படி நடந்துவிட்டது, என்று கூறியுள்ளார்.