(இராஜதுரை ஹஷான்)
புத்தாண்டு காலத்தில் மரக்கறி,பலகாரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை மீண்டும் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
புத்தாண்டின் போது சுவையாக உணவு சமைத்து உண்பதற்கு 250 கிராம் என்ற அடிப்படையில் மரகறியை கூட பெற்றுக்கொள்ள முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என பொது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் சடுதியாக குறைவடைந்த மரகறிகளின் விலை புத்தாண்டு காலப்பகுதியில் அதாவது மீண்டும் சடுதியாக உயர்வடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
இலங்கை மத்திய வங்கியின் தரப்படுத்தலுக்கமைய கடந்த 08ஆம் திகதி 145 ரூபாவாக காணப்பட்ட ஒருகிலோகிராம் போஞ்சியின் விலை 10ஆம் திகதி 315 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த 8 ஆம் திகதி 115 ரூபாவாக காணப்பட்ட உருளைக்கிழங்கின் விலை 215 ரூபாவாகவும்,198 ரூபாவாக காணப்பட்ட கத்தரிக்காயின் விலை 265 ரூபாவாகவும்,270 ரூபாவாக காணப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலை 325 ரூபாவாகவும்,218 ரூபாவாக காணப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை 295 ரூபாவாகவும் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
புத்தாண்டு காலத்தை பலகாரங்களின் அழகுப்படுத்தலுடன் வரவேற்பது பாரம்பரிய மரபாக காணப்பட்டாலும் மூலப்பொருட்களின் விலையேற்றத்தினால் பலகாரங்களின் விலையும் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
சுத்தமான தேங்காய் எண்ணெய் ஒரு போத்தலின் விலை 700 தொடக்கம் 800 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதுடன்,ஒரு கிலோகிராம் பாசிபயற்றின் விலை 1000 ரூபாவாக உயர்வடைந்துள்ளதால் பலகாரங்களின் விலையும் உயர்வடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
அதிரசம்,பாசிபயறு பலகாரம் ஆகியவற்றின் ஒன்றின் விலை 70 ரூபாவாக காணப்படுகிறது .கடந்த வருடங்களில் இவற்றின் விலை 30-40ரூபா வரை காணப்பட்டது.
கொகிஸ் ஒன்றின் விலை 40 ரூபாவாகவும், தேன்குழல் ஒன்றின் விலை 40 ரூபாவாகவும், 90 ரூபாவாக காணப்பட்ட ஆஸ்மி ஒன்றின் புதிய விலை 120 ரூபாவாக காணப்படுகிறது.
மூலப்பொருட்களின் விலையேற்றத்தினால் ஒரு கிலோகிரோம் வெண்ணெய் (பட்டர்) கேக்கின் விலை 1000 ரூபாவாக காணப்படுகிறது.
அத்தியாவசிய பொருட்கள் மீதான கட்டுப்பாட்டு விலை நீக்கப்ட்டதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையை வர்த்தகர்களும்,வியாபாரிகளும் தீர்மானித்துக்கொள்கிறார்கள்.
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை என்பதொன்று உள்ளதா என்பது கேள்விக்குறியான நிலையில் காணப்படுகிறது.
நாளை சித்திரை புத்தாண்டின் போது சம்பிரதாயத்திற்காகவாவது பலகாரங்களை அழகுப்படுத்தி,சுவையான உணவுகளை சமைத்து உண்ண முடியாத அவலநிமை என்றுமில்லாதவாறு தோற்றம் பெற்றுள்ளது.
பலவகையான உணவுகளை சமைப்பதற்கு 250 கிராம் அளவில் கூட மரகறிகளை வாங்க முடியத நிலைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளது என பொது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM