சீனாவுக்கு எதிராக பிரான்சில் போராட்டம்

12 Apr, 2022 | 03:07 PM
image

(ஏ.என்.ஐ)

திபெத்திற்கான சுதந்திரம் மற்றும் உரிமைகளில் தலையிட வேண்டாம் என்று வலியுறுத்தியும் திபெத்திய மக்கள் மீதான சீனாவின் அடக்கு முறையை கண்டித்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

பிரான்ஸ் - பரிஸ்  நகரில் அமைந்துள்ள சீன தூதரகத்திற்கு முன்பாக நேற்று  முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் நாடு கடந்த திபெத்திய அமைப்புக்கள் மற்றும் மாணவ அமைப்புகள் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளியிட்டன.

சீன நெருக்கடிகளினால் உயிரிழந்தவர்களின் உருவப்படங்களை காட்சிப்படுத்திய போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் சீன சிறைப்பிடிப்பு மற்றும் திபெத்திய மக்கள் மீதான மனித உரிமைகள் மீறல்களையும் சுட்டடிக்காட்டி கோஷமெழுப்பினர். 

சீன கட்டுப்பாடுகளிலிருந்து திபெத் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் வலியுறுத்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right