திருமண வைபவத்தில் அழைப்பிதழ் மூலமே, திருமண வீட்டாரின் செல்வச் சிறப்பை சிலர் வெளிகாட்ட எண்ணுவர். 

இதுவரை காலமும் நாம் பார்த்துள்ள மற்றும் அறிந்துள்ள ஆடம்பர அழைப்பிதழ் என்பது அதிக விலையிலானதாகவோ, அல்லது அழைப்பிதழுடன் சில மதிப்புமிக்க பொருட்களை வைத்து தருவது என இந்த வகையிலானவையாகவே இருந்து வருகிறது.

ஆனால், கர்நாடக செல்வந்தர் ஒருவர் தனது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழ் புது வகையாக வடிவமைத்துள்ளார்.

கர்நாடக முன்னாள் அமைச்சரும், சுரங்க தொழில் அதிபருமான ஜனார்தனன் ரெட்டி தான் இந்த அழைப்பிதழை உருவாக்கியுள்ளார்.

ஜனார்தன் ரெட்டியின் மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க இருக்கிறது, திருமணத்திற்கு அழைக்க இவர் ஒரு அழைப்பிதழ் பெட்டியையே கொடுத்து வருகிறார். 

குறித்த அழைப்பிதழ் பெட்டியை திறந்தவுடன் அதில் ஒரு திரையில் ஒரு நிமிடத்திற்கும் அதிகமாக ஓடும் ஒரு வீடியோ தோன்றுகிறது, அதில் ஒரு பிரத்தியோக பாட்டு ஒளிபரப்பாகிறது, அதில் முன்னாள் அமைச்சர் ரெட்டி, அவரின் மனைவி, மகன், மற்றும் மணப்பெண், மணமகன் ஆகியோர் தோன்றி திருமணத்திற்கு அழைக்கும் காட்சி ஒளிபரப்பாகின்றமை குறிப்பிடத்தக்கது.