இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை மறுதினம் சனிக்கிழமை இலங்கை வருகிறார்.

உயர்மட்டக்குழுவினருடன் இலங்கை வரும் இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ். ஜெய்சங்கர், இலங்கைகையில் தங்கியிருக்கும் 3 நாட்களில் இந்தியாவின் புதிய முதலீடுகளை ஊக்குவிப்பது  தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடவுள்ளார்.

இதன்போது இலங்கையின் உயர்மட்ட அதிகரிகள் மற்றும் வர்த்தகர்களுடன் சந்திப்புக்களை மேற்கொள்வார்.

இவரது விஜயத்தின் போது எட்கா ஒப்பந்தம் தொடர்பில் எவ்வித பேச்சுக்களும் இடம்பெறாதென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.