Seylan Colombo Motor Show 2016இன் பிரதான மற்றும் பிரத்தியேக வங்கி அனுசரணையாளராக செலான் லீசிங்

Published By: Robert

20 Oct, 2016 | 11:00 AM
image

செலான் வங்கி ஒக்டோபர் 21, 22 மற்றும் 23ஆம் திகதிகளில் BMICHஇல் இடம்பெறும் Seylan  Colombo Motor Show 2016 இன் பிரதான மற்றும் பிரத்தியேக வங்கி அனுசரணையாளராக தொடர்ந்தும் 2ஆவது வருடமாக இணைந்துள்ளது. நாட்டின் மாபெரும் மோட்டார் வாகனக் கண்காட்சியான Seylan Colombo Motor Show நூற்றுக்கணக்கான பார்வையாளர்களை ஈர்ப்பதுடன் வங்கியின் லீசிங், தனிநபர் கடன் மற்றும் ஏனைய சேவைகளை காட்சிப்படுத்தும் தளமாக அமைகிறது. மிக முக்கியமாக, கண்காட்சி தினங்களில் வங்கி தமது லீசிங் தொடர்பாக பதிவு செய்வோருக்கு கவர்ச்சிகரமான விசேட லீசிங் கட்டணங்களை வழங்கவுள்ளது.

செலான் வங்கி கண்காட்சியன்று பதிவு செய்வோருக்கு சிறப்பு வட்டிவீதம்/வாடகை உள்ளடக்கிய சிறப்பு செலான் லீசிங் பக்கேஜை வழங்கவுள்ளது. காட்சிப்படுத்தப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கு மற்றும் லீசிங் பெறும் எண்ணமுள்ள வேறேதும் வாகனத்துக்கு On-the-spot லீஸ் அனுமதி பெறலாம். மேலும் செலான் லீசிங் முதல் வருடத்திற்கான காப்புறுதி பிரீமியத் தள்ளுபடி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து லீசிங்குக்கும் இலவச கிரெடிட் கார்ட் ஆகியவற்றை வழங்குகிறது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த செலான் வங்கியின் வாடிக்கையாளர் நிதிப்பிரிவின் பிரதி பொது முகாமையாளர் டெல்வின் பெரேரா, “புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் Seylan Colombo Motor Show சிறந்த தளத்தை வழங்கியுள்ளது. பார்வையாளர்கள் செலான் உத்தியோகத்தர்களுடன் அவர்களின் லீசிங் மற்றும் ஏனைய வங்கித்தேவைகள் தொடர்பாக கலந்துரையாடலாம். தனிநபர் கடன்கள் மூலம் வாடிக்கையாளர்கள் தமது வாகனங்களை மீள்வடிவமைக்கலாம். எமது சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் அவர்களின் வருமானம், வாகன மொடல், வாகன தரம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு அவர்களுக்கு ஏற்ற தீர்வுகளை பெற்றுக்கொடுப்பர்." என்றார்.

செலான் லீசிங் ஊடாக வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப நெகிழ்வான கட்டணத் திட்டத்தை தெரிவுசெய்யலாம். தற்போதுள்ள வாகனத்திலிருந்து புதிய வாகனத்திற்கு மேம்படுத்தும் போது அதே ஆவணங்களின் ஊடாக பெற்றுக் கொள்ளும் வாய்ப்பையும் வழங்கவுள்ளது. வங்கி 7 வருட லீசிங் மீள்செலுத்தும் திட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன், பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு 12 வருடங்கள் வரையிலான காலத்தை தயாரிப்புக்காலமாக கருதுகிறது. வாடிக்கையாளர்கள் இலகுவாக ஏனைய வங்கிகள்/நிதி நிறுவனங்களிலிருந்து லீசிங்கை இவ்வங்கிக்கு மாற்றும் வசதியையும் வழங்குகிறது. மேலும் எவ்வித ஆரம்ப தீர்வு கட்டணங்களும் செலுத்தத் தேவையில்லை.

செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் பிரத்தியேக வங்கியியல் பிரதி பொது முகாமையாளர் டிலான் விஜயசேகர கருத்துத் தெரிவிக்கையில், “செலான் வங்கி மீண்டுமொரு முறை Seylan  Colombo  Motor  Show 2016 உடன் இணைவதையிட்டு பெருமகிழ்ச்சியடைகிறது. சென்ற வருட வெற்றியைத் தொடர்ந்து எமது இணைவு இவ்வருடமும் பல நன்மைகளை பெற்றுத் தருவதுடன் வாடிக்கையாளர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என  நம்புகின்றோம். எமது வாடிக்கையாளர்களை கருத்திற் கொண்டு இம்முறை எமது லீசிங் சேவை ஊடாக வாடிக்கையாளர்களுக்கு ஈடிணையற்ற சலுகைகளை வழங்கவுள்ளோம். எமது வாடிக்கையாளர்களுக்கு மேலான சேவைகளை வழங்குவதை நோக்காகக் கொண்டு லீசிங் மற்றும் இதர வங்கிச் சேவைகளையும் வழங்கத் தயாராகவுள்ளோம் என்றார்.

Asia Exhibition and Conventions (Pvt) Ltd ஆல் ஏற்பாடு Seylan Colombo Motor Show 2016 நாட்டின் சமீபத்திய பிரபல்யமான வாகன வகைகளையும் முன்னணி வாகன வணிகம் செய்பவர்களையும் காட்சிப்படுத்துகிறது. உயர் மதிப்புமிக்க வாகனங்கள், மீள்வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் புதிய வாகன மொடல்களையும் காட்சிப்படுத்துகிறது. வாகனங்களுக்கு அப்பாற்பட்டு முன்னணி வாகன வழங்குநர்கள், பொழுதுபோக்கு அமைப்புகள், எரிபொருள், உதிரிப் பாகங்கள், நிறப்பூச்சு மற்றும் ஏனைய வாகனத் தீர்வுகளை பெறலாம். மேலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டவரின் பங்குபற்றுதலுடன் பைக் வித்தைகளும் இடம்பெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right