2022 ஆம் ஆண்டுக்கான ஒலிவர் விருது வழங்கல் விழாவில் இலங்கையின் ஹிரன் அபேசேகர சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

Image

லண்டன் நாடகம், ஓபரா, நடனம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான விருநது வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்றது.

இதன்போது சிறந்த நடிகருக்கான விருதை ‘லைஃப் ஆஃப் பை’ ( Life of Pi ) நாடகத் தழுவலுக்காக ஹிரன் அபேசேகர பெற்றார்.

Image

புக்கர் பரிசு பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட லைஃப் ஆஃப் பை சிறந்த புதிய நாடகமாகப் பெயரிடப்பட்டதுடன் பல தொழில்நுட்பரீதியிலான பரிசுகளைப் பெற்றது.

நாடகத்தின் நாயகன் ஹிரன் அபேசேகர சிறந்த நடிகராகவும், நாடகத்தில் புலியாக நடித்த 7 ஏனைய நடிகர்களும் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பகிர்ந்துகொண்டனர்.

Image

இது குறித்து விருது பெற்ற ஹிரன் அபேசேகர தெரிவிக்கையில்,

“  சிறந்த நடிகர் விருதை வெல்வதற்கு நான் அதிகமாக பாடுபட்டுள்ளேன். இந்த விருதை எனது தாய்நாடான இலங்கைக்கு சமர்ப்பிக்கின்றேன். எனது நாடு தற்போது கடினமான காலகட்டத்தைக் கடந்துகொண்டிருக்கின்றது. நான் இந்த தருணத்தில் இலங்கையர்களை நினைவுகூருகின்றேன் அத்துடன் உங்களுடன் துணையாக இருக்க விரும்புகின்றேன்” என தெரிவித்துள்ளார்.