தொடரும் சோகம் ! எரிபொருள் வரிசையில் காத்திருந்த மூவர் மரணம் !

11 Apr, 2022 | 05:08 PM
image

(செய்திப்பிரிவு)

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக  வரிசையில் காத்திருந்த மூவர் திடீர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் மற்றையவர் இன்று திங்கட்கிழமையும் வரிசையில் காத்திருந்த நிலையில், உயிரிழந்துள்ளனர்.

தங்கொட்டுவ

தங்கொட்டுவ பிரதேசத்தில் எரிபொருள் கொள்வனவிற்காக வரிசையில் நின்ற பஸ் சாரதியொருவர் உயிரிழந்துள்ளார். கோனவில பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  குறித்தநபர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார்.

காலி

காலி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட தவலமை இனிதும பிரதேசத்தில் எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 43 வயதான காலி ஹபரகத பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

வென்னப்புவ

வென்னப்புவ பொலிஸ்பிரிவுக்குட்பட்ட வாய்க்காலை பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிலையொமொன்றில் வரிசையில் நின்ற 51 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

தலுவகொட்டுவ கொச்சிகடை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் மாரடைப்பிற்கு சிகிச்சை பெற்று வந்தவரென தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுக்கடை நீதிமன்ற வளாகம் முன்பாக சட்டத்தரணிகள்...

2023-03-24 15:27:08
news-image

10 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள்...

2023-03-24 13:46:22
news-image

மட்டக்களப்பில் பஸ் மோதி பெண் உயிரிழப்பு...

2023-03-24 14:03:21
news-image

நீதித்துறையை அச்சுறுத்துவதை நிறுத்தவேண்டும் - சிவில்...

2023-03-24 12:23:46
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட கடன்...

2023-03-24 13:18:52
news-image

யாழில். இரு உணவகங்களுக்கு தண்டத்துடன் சீல்!

2023-03-24 11:48:33
news-image

கம்பளை பாடசாலை ஒன்றின் 17 மாணவர்களின்...

2023-03-24 11:53:59
news-image

பாதாள உலகின் முக்கிய புள்ளி புரு...

2023-03-24 11:08:33
news-image

விமானப்படையின் முன்னாள் அதிகாரி கறுப்புபட்டியலில் -...

2023-03-24 11:02:50
news-image

கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நீர்விநியோகத்...

2023-03-24 11:00:38
news-image

இலங்கைக்கு ஐநாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை...

2023-03-24 10:02:20
news-image

கிராஞ்சி கடலட்டை பண்ணை வழக்கு ;...

2023-03-24 10:08:27