(எம்.ஆர்.எம்.வசீம்)
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கொழும்பில் இருந்து ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு 24மணி நேர விசேட பஸ் சேவையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக நாள் ஒன்றுக்கு மேலதிகமாக 200பஸ் வண்டிகளை போக்குவரத்தில் ஈடுபடுத்தவும் திட்டமிட்டுளோம் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக்க ஸ்வர்ணஹங்ச தெரிவிக்கையில்,
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வழமை போன்று இம்முறையும் தூரப்பிரதேசங்களுக்கு பயணிப்போருக்கு விசேட பயணிகள் போக்குவரத்து சேவையை ஆரம்பித்திருக்கின்றோம்.
எதிர்வரும் 19ஆம் திகதிவரை இந்த சேவை முன்னெடுக்கப்படும். கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 24மணி நேரமும் நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் விசேட பஸ் சேவை இடம்பெற இருக்கின்றது.
வழமை போன்று இடம்பெறும் பஸ் சேவைக்கு மேலதிகமாக நாள் ஒன்றுக்கு 200பஸ் வண்டிகளை மேலதிக சேவைக்கு ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.
அத்துடன் டீசல் பிரச்சினை இருந்து வருவதால், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்திருக்கும் மற்றும் தூரப்பிரதேசங்களுக்காக இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கும் பயணிகள் போக்குவரத்து தனியார் பஸ் வண்டிகளுக்கு, இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான 4 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.
அதேபோன்று அதிவேக பாதையிலும் மாகும்புர மற்றும் கடுவலை நுழைவிடங்களில் இருந்தும் வழமையாக இடம்பெறும் பயணிகள் போக்குவரத்து சேவைக்கு மேலதிகமாக விசேட பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM