ஆர்.ராம்
“நாட்டில் 1324 வகை மருந்துகள் பயன்படுத்தப்படும் நிலையில் அவற்றில் 5 வகை உயிர்காக்கும் மருந்துகளுக்கும், 140 வகை அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதோடு 60 வகையான மருந்துப்பொருட்கள் ஒருவாரத்திற்கே போதுமானதாக உள்ளன” ஜனாதிபதி கோட்டாவிடம் விடுக்கப்பட்ட சுகாதாரத்துறையின் கோரிக்கைகள்
- சுகாதார அவசர நிலைமையை பிரகனடம் செய்யுங்கள்
- மனிதாபிமான உதவித் திட்டங்களை உடன் நாடுங்கள்
- முதன்மை அடிப்படையில் செலவுகளை மறுசீரமையுங்கள்
- புலம்பெயர் இலங்கையர்களின் உதவிகளைகப் பெறுங்கள்
- துறைசார்ந்த நிபுணர்கள் குழுவை விரைந்து அமையுங்கள்
இலவச சுகாதார சேவையை வழங்குகின்றோம் என்று மார்பு தட்டிக்கொள்ளும் இலங்கை நாடாளவிய ரீதியில் 555 அரச வைத்தியசாலைகளைக் கொண்டிருக்கின்றது.
இந்த வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுக்குச் சென்றாலோ, மாதாந்த கிளினிக்குகளுக்குச் சென்றாலோ, சத்திரசிகிச்சைகளுக்குச் சென்றாலோ‘காத்திருப்பு’ என்பது வழக்கமானது.
இந்தக் ‘காத்திருப்பு’ சில தருணங்கள் பல மணிநேரங்களாக இருக்கலாம் பல தருணங்களில் மாதங்களாக, வருடங்களாகக் கூட இருக்கலாம். அதுகுறித்து பலதரப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும் யதார்த்தம் பற்றிய புரிதல் மக்களுக்கு காணப்பட்டதால் இத்தனை காலமும் பொறுமைகாத்து வருகின்றார்கள்.
கடந்த காலங்களில் அரச வைத்தியசாலைகளில்ரூபவ் சில மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அருகில் உள்ள தனியார் மருந்தகங்களில் பெற்றுத்தருமாறு வைத்திய நிபுணர்கள் மருந்துச்சீட்டை வழங்குவதும் நோயளர்களும்ரூபவ் அவர்களது அன்புக்குரியவர்களும் “சிறு செலவு தானே” என்ற மனப்பான்மையில் அவற்றைப் பெற்றுக்கொடுக்கும் நிலைமைகளும் தொடர்ந்து வந்தன.
மருந்துகளை, மருத்துவ உபகரணங்களை இவ்வாறு தனியார் மருந்தகங்களில் பெற்றுக்கொடுப்பதற்கு என்ன காரணம் என்று அக்காலத்தில் யாரும் கிஞ்சித்தும் சிந்தித்திருக்கவில்லை. ஆனால் அக்காலத்திலும் மருந்துகள், மருத்துவ உபகரணங்களுக்கு சொற்ப அளவிலான தட்டுப்பாடுகள் நிலவியிருந்தன. அதனைவிட தனியாரிடத்தில் கொள்வனவு செய்வதற்கு வேறுசில காரணங்களும் இல்லாமில்லை.
இதேநேரம், “நாட்டின் மருந்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 80சதவீதமான மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டே பயன்படுத்தப்பட்டு வருகின்றன” என்று சுட்டிக்காட்டும் வைத்திய ஆய்வுக்கூட நிபுணர் சங்கம் மற்றும் சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவர் ரவி குமுதேஷ் “டொலர்கள் பற்றாக்குறையால் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கடன்பத்திரங்களை வழங்க முடியாது நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ளன” என்றும் குறிப்பிட்டார்.
“மருந்துத் தட்டுப்பாட்டை தீர்ப்பதில் நிதி அமைச்சும்ரூபவ் பொதுச்சேவை ஆணைக்குழுவும் உடனடியான கவனத்தினைச் செலுத்த வேண்டும்” என்று வலியுறுத்தும் அவர் “அடுத்துவரும் நாட்களில் 120மருந்து வகைகள் முழுமையாகவே கையிருப்பே இல்லாது போய்விடும்” என்றும் முன்னெச்சரிக்கை விடுத்தார்.
“பொதுவாகவே வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்களுக்கு நிலைமைகளைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும் வைத்தியர்கள்ரூபவ் தாதியர்கள், ஆய்வுகூடப் பணியாளர்கள் நிலைமைகளை நன்கறிந்து கொண்டுள்ளனர்” என்றும் அவர் கூறினார்.
“தற்போதைய நிலையில் வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள மருந்துகளுக்கு மாற்றான மருந்துகளை வழங்குகின்றார்கள். ஆனால் அவற்றின் விளைவுகளை எதிர்காலத்தில் தான் உணரமுடியும். அத்துடன், அவசர சத்திரசிகிச்சைகளைக் கூட தாமதப்படுத்த வேண்டிய நிலைமைகள் காணப்படுகின்றன. இதனால் உயிர்காக்கும் சேவையை உறுதி செய்வதில் கேள்விகள் எழுகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேநேரம், நாட்டின் மருந்துவகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளமையையும்ரூபவ் விநியோகத்தில் தாமதங்கள் காணப்படுகின்றமையையும் ஒளடத உற்பத்திகள்ரூபவ் விநியோகம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கான இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க ஏற்றுக்கொண்டுள்ளார்.
“நாட்டில் பயன்படுத்தப்படும் 1324மருந்து வகைகளில் காணப்படும் 14வகை உயிர்காக்கும் மருந்து வகைகள் 10ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதில் 5 வகைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளதோடு 600 வகையான அத்தியாவசியப் மருந்து வகைகளில் 140 வரையிலான மருந்து வகைகளுக்கு பற்றாக்குறை நீடிக்கின்றதோடு 60வகையான மருந்து வகைகள் வாரமொன்றுக்கே போதுமானதாக உள்ளது” என்றும் கூறினார்.
“2022 ஆம் ஆண்டுக்கான மருந்து வகைகளை இறக்குமதி செய்யும் கேள்விப்பத்திரங்கள் 2021ஆம் ஆண்டில் நிறைவு செய்வதே வழக்கமாகும். தற்போது புதிய இறக்குமதியாளர்களை கண்டறிவது கடினமானது. இந்நிலையில் தற்போது நிதி அமைச்சு, திறைசேரி ஊடாக அழுத்தங்களை வழங்கி எஸ்.பி.சி. நிறுவனம் ஊடாக இறக்குமதிகளை மெதுவான வேகத்தில் முன்னெடுக்கின்றோம்” என்றும் குறிப்பிட்டார்.
“நாட்டின் தேவைக்கு 650மில்லியன் பரசிற்றமோல் தேவையாக உள்ளது. தற்போதைய சந்தையில் அதன் விலை 280ரூபாவாக உள்ளது. இதனை குறைப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதோடு, வைத்தியர்களை வரையறுக்கப்பட்ட முறையில் மருந்துப்பொருட்களை விநியோகம் செய்யுமாறும், அவசரமற்ற சத்திரசிகிச்சைகளை காலம் தாழ்த்துமாறும் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்” என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, “உலக சுகாதார ஸ்தாபனம், உலக வங்கி ஆகிய உதவிகளைப் பெறுவதற்கு நடவடிக்கைகளை எடுக்கும் அதேசமயம், இந்திய கடன் உதவியையும் இலங்கை மற்றும் மக்கள் வங்கிகளின் ஊடாக தலா 7மில்லியன் கடன் பத்திரங்களை விநியோகிக்கவும் மேலதிகமாக அவற்றிடமிருந்து 20மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ளவும் தீர்மானித்துள்ளோம்” என்றும் வைத்தியர் சமன் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளைப் போக்குவதற்கு இந்தியா இரண்டாவது தடவையாக வழங்கிய ஒரு பில்லியன் டொலர்கள் நிதியுதவியினுள் மருத்துவகைகள் கொள்வனவுக்கான 200மில்லியன் டொலர்களும் உள்ளடங்குகின்றது.
அதேவேளை, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக திறைசேரி 65பில்லியன் ரூபாவை விடுவித்துள்ளபோதும் டொலருக்கு எதிரான ரூபாவின் வீழ்ச்சி காரணமாக, மேலும் 15மில்லின் ரூயஅp;பா தேவைப்படுவதாக சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், மூன்று வாரங்களுக்கு முன்னதாக மருந்துப்பொருட்களின் சில்லறை விலை 29சதவீதத்தினால் ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையினால் அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 20சதவீதத்தினால் மருந்துப்பொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM