கொழும்பு புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்ற தென்னிந்திய கலைஞர்கள் மற்றும் நம்நாட்டு பிரபலங்கள் கலந்துகொண்ட மாபெரும் கலை நிகழ்ச்சியில், இலங்கையில் பிறந்து உலக அறிவிப்பாளராக உயர்ந்து, நிமிர்ந்து நிற்கும் திரு B.H. அப்துல் ஹமீத் அவர்களுக்கு, மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் தமிழ் வாரிசு எனும் கௌரவ அங்கீகாரம், "பாரதியின் தமிழ் மகன்" எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதன் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன்போது சிறப்புரை ஆற்றிய திரு B.H. அப்துல் ஹமீத்இ தனது வாழ்நாளில் மறக்க முடியாத நாள் எனவும், இது போன்ற விருது இதுவரை தனக்கு கிடைக்கப்பெறவில்லை எனவும் குறிப்பிட்டமை இவ்விருதுக்கே பெருமை சேர்த்தது.
இவ்விருது, இலங்கை ஊடகத்துறையில் தனக்கென தனி அங்கீகாரத்தினை பெற்றுள்ள சிரேஷ்ட அறிவிப்பாளரும், ஊடகவியலாளருமான திரு. நவநீதனின் Fivestar Creations, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், வீரகேசரி பத்திரிகை, Starதமிழ் வானொலி, Mode Engineering, Sathiesh நகையகம், Goldstar ஆடையகம், மற்றும் IDMNC நிறுவனங்கள் கூட்டாக இணைந்து வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது, பிரபல தென்னிந்திய கலைஞர்களான, VIjay டிவி புகழ் மூக்குத்தி முருகன், மானசி, முத்துச்சிற்பி, பரத் மற்றும் நவநீதன் ஆகியோர், 73ஆவது அகவையை கடக்கும் எங்கள் நாட்டின் பெருமை, திரு B.H. அப்துல் ஹமீத் அவர்களின் பாதம் தொட்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM