(என்.வீ.ஏ.)
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட அங்குரார்ப்பண தேசிய சுப்பர் லீக் 4 - நாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் யாழ்ப்பாணம் அணியை வெற்றிகொண்ட (முதல் இன்னிங்ஸ் புள்ளிகள்) கண்டி அணி சம்பியன் பட்டத்தை சூடியது.

காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதல் இரண்டு நாட்கள் முழுமையாக விளையாடப்பட்ட போதிலும் கடைசி 2 நாட்களும் மழையினால் பாதிக்கப்பட்டது. கடைசி நாளன்று ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டு வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
எனினும் முதல் இன்னிங்ஸில் யாழ்ப்பாணம் அணியை விட 217 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த கண்டி அணி முதலாவது தேசிய சுப்பர் லீக் சம்பியனானது.

கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி அதன் முதல் இன்னிங்ஸில் 444 ஓட்டங்களைக் குவித்தது.

ஓஷத பெர்னாண்டோ சதம் குவித்ததுடன் காமில் மிஷார, கசுன் விதுர, அணித் தலைவர் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் அரைச் சதங்கள் குவித்து அணியைப் பலப்படுத்தினர்.
பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் அணி 227 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

லசித் எம்புல்தெனிய, அஷேன் டெனியல் ஆகிய இருவரும் தம்மிடையே 7 விக்கெட்களைப் பகிர்ந்தனர்.
யாழ்ப்பாணம் அணி 2ஆவது இன்னிங்ஸில் 1 விக்கெட்டை இழந்து 52 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் அதன் பின்னர் இன்னிங்ஸ் தொடரவே இல்லை.
தொடர்நாயகன்: கமிந்து மெண்டிஸ் (கண்டி - 886 ஓட்டங்கள்), சிறந்த துடுப்பாட்ட வீரர் ஓஷத பெர்னாண்டோ (கண்டி - 721 ஓட்டங்கள்), சிறந்த பந்துவீச்சாளர்: ப்ரபாத் ஜயசூரிய (கொழும்பு - 26 விக்கெட்கள்)

எண்ணிக்கை சுருக்கம்
கண்டி 1ஆவது இன்: 444 (ஓஷத பெர்னாண்டோ 109, கமிந்து மெண்டிஸ் 87, கசுன் விதுர 71, காமில் மிஷார 56, புலின தரங்க 42, டிலும் சுதீர 86 - 4 விக்., தனஞ்சய டி சில்வா 96 - 3 விக்.)
யாழ்ப்பாணம் 1ஆவது இன்: 227 (நிஷான் மதுஷ்க 57, டிலும் சதீர 49 ஆ.இ., தனஞ்சய டி சில்வா 30, லசித் எம்புல்தெனிய 100 - 4 விக்., அஷேன் டெனியல் 89 - 3 விக்., அசித்த பெர்னாண்டோ 25 - 2 விக்.)
கண்டி 2ஆவது இன்: 52 - 1 விக்.

விசேட விருதுகள்
தொடர்நாயகன்: கமிந்த மெண்டிஸ் (கண்டி - 886 ஓட்டங்கள்), சிறந்த துடுப்பாட்ட வீரர் ஓஷத பெர்னாண்டோ (கண்டி - 721 ஓட்டங்கள்), சிறந்த பந்துவீச்சாளர்: ப்ரபாத் ஜயசூரிய (கொழும்பு - 26 விக்கெட்கள்)
கமிந்து மெண்டிஸுக்கு 500,000 ரூபா பணப்பரிசும் மற்றைய இருவருக்கு தலா 250,000 ரூபா பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன.
சம்பயின் யாழ்ப்பாணம் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 50,00,000 ரூபா பணப்பரிசும் 2 ஆம் இடத்தைப் பெற்ற கண்டி அணிக்கு 2,500,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டன.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM