(எஸ்.என்.நிபோஜன்)

கிளிநொச்சி பரந்தன் கரடிப்போக்கு டிப்போ சந்தி  ஆகிய பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வேண்டி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கம் கிளிநொச்சி மாவட்ட சிவில் அமையம் ஆகிய இணைந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்து நடத்திவருகின்றது.

 

 

இன்று  காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம்  கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தி கிளிநொச்சி நகரம் பரந்தன் சந்தி   ஆகிய இடங்களில் இடம்பெறுவதுடன் அரசியல்கைதிகள் மற்றும் காணமல்  ஆக்கப்பட்டவர்ளுக்கு  நீதிகோரி  நடைபெறுகின்ற கையெழுத்துப் போராட்ட  கையெழுத்துக்கள் அடங்கிய மனு ஜனாதிபதி அவர்களுக்கு  அனுப்ப இருக்கின்றது அத்துடன் குறித்த போராட்டத்திற்கு கிளிநொச்சி மக்கள் தமது பூரண ஆதரவை  வழங்கிக் கொண்டிருப்பதாக  அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.