இடைக்கால அரசாங்கம் நீண்டகால தீர்வாக அமையாது - வீரசுமன வீரசிங்க

Published By: Digital Desk 4

10 Apr, 2022 | 09:07 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பொருளாதார மற்றும் அரசியல்   மீட்சிக்கு இடைக்கால அரசாங்கம் நீண்டகால தீர்வாக அமையாது.

இவ்வருடத்திற்குள் பொதுத்தேர்தலை நடத்துவது அத்தியாவசியமானது ஏனெனில் இடைக்கால அரசாங்கத்தை நாட்டு மக்கள் ஏற்கபோவதில்லை.

எமது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு பொதுத்தேர்தலை இலக்காக கொண்டதாக அமையும் என கம்யூனிச கட்சியின் பதில் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன  வீரசிங்க தெரிவித்தார்.

Articles Tagged Under: வீரசுமன வீரசிங்க | Virakesari.lk

இடைக்கால அரசாங்கம்  தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் முழுமையாக புறக்கணித்துள்ளார்கள்.

மக்களின் வெறுப்பை பெற்றுக்கொண்டதை தொடர்ந்தே 26 அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியுள்ளார்கள்.நாட்டின் நிதி நிலைமை சீராக அமைந்நிருந்தால்  பொதுத்தேர்தலை நடத்தியிருக்கலாம்.

அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் பாரிய நெருக்கடி நிலைமை காணப்படுகின்ற பின்னணியில் பொதுத்தேர்தலை தற்போது நடத்துவது சாத்தியமற்றது.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி விடுத்த அழைப்பை பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளதை தொடர்ந்து அரசாங்கத்துடன் ஒன்றினைந்தவர்களை இணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு இடைக்கால அரசாங்கம் நீண்டகால தீர்வாக அமையாது.பொருளாதாரம் மற்றும் சமூக கட்டமைப்பில் தீவிரமடைந்துள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இடைக்கால அரசாங்கம் தற்காலிக தீர்வாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

இடைக்கால அரசாங்கத்தையும் நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.இவ்வருடத்திற்குள் பொதுத்தேர்தலை நடத்தும் சூழலை உருவாக்குவது எமது பிரதான எதிர்பார்ப்பாக உள்ளதால் எமது அடுத்தக்கட்ட நகர்வு பொதுத்தேர்தலை அடிப்படையாகக் கொண்டதாக அமையும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12