இந்திய கடனுதவி திட்டம் நிறைவு பெற்றவுடன் அடுத்தக்கட்ட தீர்வு என்ன ? சுதந்திரக் கட்சி கேள்வி

Published By: Digital Desk 4

11 Apr, 2022 | 06:48 AM
image

(இராஜதுரை ஹஷான்)

இந்திய கடனுதவி திட்டம் நிறைவு பெற்றவுடன் அடுத்தக்கட்ட தீர்வு என்ன என்பது கேள்குறியான நிலையில் உள்ளது.

அரசாங்கத்திடம் பெரும்பான்மை பலம் கிடையாது. 19ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் எமக்கு ஆதரவு வழங்குவார்கள் என சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

Articles Tagged Under: தயாசிறி ஜயசேகர | Virakesari.lk

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமாக தீவிரமடைந்துள்ளது.சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண பாராளுமன்ற மட்டத்தில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக கடந்த நாட்களில் வாதபிரதிவாதங்கள் மாத்திரமே இடம்பெற்றன.

நாட்டில் தற்போது நிலவும் அமைதியற்ற நிலைமையை வரையறுக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கையிருப்பினை மேலும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டமும்,எரிபொருள்,எரிவாயு மற்றும் மின்விநியோக கட்டடைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமை சுற்றுலாத்துறையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கடனுதவி திட்டத்தினால் தற்போது எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக்கொள்ளப்படுகிறது.

இந்திய கடனுதவி திட்டம் எதிர்வரும் மாதத்துடன் நிறைவு பெறும் போது அடுத்தக்கட்ட தீர்வு என்ன என்பது குறித்து அரசாங்கத்திடம் கேள்விக்குறியான தன்மையே காணப்படுகிறது.

நாட்டின் ஸ்தீரத்தன்மை பேணப்பட்டால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்.பொதுத்தேர்தல் ஒன்றை நடத்தும் அளவிற்கு நாட்டின் நிதி நிலைமை சீராக இல்லை என்ற காரணத்தினால் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்து நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை இரத்து செய்யவும்,19ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வரவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும்.அரசாங்கத்திடம் பெரும்பான்மை பலம் தற்போது கிடையாது.19ஆவது திருத்தத்திற்கு பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகின் மிக நீண்ட தொடு உணர்...

2026-05-16 16:42:22
news-image

UPDATE ; வனவாசல ரயில் விபத்து...

2026-05-16 16:13:27
news-image

கடலில் காற்றின் வேகம், மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்...

2026-05-16 16:33:52
news-image

முள்ளிவாய்க்கால் கண்ணீர் ஓயாது ; அந்த...

2026-05-16 15:09:07
news-image

களுத்துறையில் 600 போதை மாத்திரைகளுடன் ஒருவர்...

2026-05-16 14:52:18
news-image

ரம்பேவ பகுதியில் விநியோகிக்கப்பட்ட MOP உரத்தின்...

2026-05-16 14:58:43
news-image

மானிப்பாயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு

2026-05-16 15:19:02
news-image

காலி கோட்டை அமைதிப் போராட்டம் :...

2026-05-16 14:48:58
news-image

வாகன இறக்குமதி வரி அதிகரிப்பு தற்காலிகமானது...

2026-05-16 14:43:20
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால்...

2026-05-16 13:42:23
news-image

மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்துக்காக மனப்பாங்கு ரீதியாகவும்...

2026-05-16 13:11:49
news-image

சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு

2026-05-16 12:59:04