அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை - திஸ்ஸ விதாரண

Published By: Digital Desk 4

10 Apr, 2022 | 08:09 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கபோவதில்லை.

அரசியல் நெருக்கடியை தீவிரப்படுத்தி பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்த விரும்பில்லை என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

தொழிற்சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபடுவது முற்றிலும் தவறானது - திஸ்ஸ விதாரன  | Virakesari.lk

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் பங்காளி கட்சிகள் நிலைப்பாடு குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் நாடு தற்போது பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளது என்பதற்கு எவ்வித மாற்று கருத்தும் கிடையாது.

முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவை 'பொருளாதார கொலையாளி'என விமர்சிப்பதில் எவ்வித தவறும் கிடையாது.

பொருளாதார நெருக்கடி தற்போது அரசியல் நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண வேண்டுமாயின் நாட்டில் அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பு ஸ்தீரத்தன்மையுடன் காணப்பட வேண்டும் இருப்பினும் நடைமுறையில் அவ்விரண்டும் கேள்விக்குறியான தன்மையில் உள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியினர் கொண்டு வரவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அரசாங்கம் பதவி விலகினால் ஒன்று பொதுத்தேர்தல் இடம்பெற வேண்டும் அல்லது பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

பொதுத்தேர்தல் ஒன்றை நடத்தும் அளவிற்கு நாட்டின் பொருளாதாரம் சீராக இல்லை என்பதால் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்.

இடைக்கால அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ள போவதில்லை என எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள்.

இவ்வாறான பின்னணியில் அறிவுபூர்வமாக செயற்பட வேண்டும்.அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தற்போது பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர் ஒருபோதும் ஆதரவு வழங்க போவதில்லை.அரசியல் நெருக்கடியை தீவிரப்படுத்தி பொருளாதார பாதிப்பை மேலும் தீவிரப்படுத்த நாம் விரும்பவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரம்பொருள் அருளால் இன்பமிகு வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்...

2026-04-12 15:35:59
news-image

களுவாஞ்சிக்குடி நகரில் களைகட்டிய சித்திரை வியாபாரம்

2026-04-12 15:28:24
news-image

பழைய பிணக்குகளை மறந்து ஒற்றுமையுடன் புதிய...

2026-04-12 15:15:38
news-image

உடலில் மறைத்து கொக்கைன் கடத்தல்: வெளிநாட்டுப்...

2026-04-12 15:25:21
news-image

கடல் அட்டை பிடித்த 06 பேர்...

2026-04-12 15:03:40
news-image

இயற்கை அழகுசாதனப் பொருட்கள் என கூறி...

2026-04-12 14:59:21
news-image

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம்...

2026-04-12 14:50:41
news-image

மின்சார சபை ஊழியர்களுக்கு உரிய இழப்பீட்டுத்...

2026-04-12 14:32:14
news-image

நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்! - தையிட்டி...

2026-04-12 13:19:33
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள...

2026-04-12 13:18:45
news-image

“முழு நாடுமே ஒன்றாக” வேலைத்திட்டம் :...

2026-04-12 13:15:55
news-image

மட்டக்களப்பில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு: உற்சாகத்தில்...

2026-04-12 12:42:32