(இராஜதுரை ஹஷான்)
நாடு வெகுவிரைவில் வங்குரோத்து நிலைமையை அடைவதை எவராலும் தவிர்க்க முடியாது. மோசடியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க முன்னர் அவர்கள் ஊடாகவே அரசியமைப்பு முழுமையாக திருத்தியமைக்க அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.
அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதம் முழுமையாக நீக்கப்பட்டால் மாத்திரமே படித்த இளம் தலைமுறையினர் அரசியலுக்குள் பிரவேசிப்பார்கள் என முன்னாள் கணக்காளர் நாயகம் காமினி விஜயசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
டொலர் நெருக்கடி தீவிரமடைந்து வருகிறது ஆகவே டொலர் பரிவர்தனை குறித்து அதிக அவதானம் செலுத்தமாறு பல வருடகாலமாக அறிவித்தும் அதனை பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக செயற்பட்டதன் விளைவை தற்போது முழு நாடு;ம் எதிர்க்கொள்கிறது.
நாடு வெகுவிரைவில் வங்குரோத்து நிலைமையினை அடையும் என்பதை கவலையுடன் தெரிவித்துக்கொள்ளும் சூழல் காணப்படுகிறது.
ஆட்சியாளர்கள் தங்களின் எண்ணம் போல் மோசடி செய்யலாம் என்று குறிப்பிடும் அளவிற்கு நாட்டின் அரசியலமைப்பு காணப்படுகிறது.
அரச தலைவர்கள் நிச்சயம் பதவி விலக வேண்டும் அதற்கு முன்னர் அவர்களால் அரசியலமைப்பு முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும் அதற்கு ஒட்டுமொத்த மக்களும் ஒன்றினைந்து அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.
அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் முழுமையாக இரத்து செய்யப்படுதல் அத்தியாசியமானது.படித்த இளம் தலைமுறையினர் அரசியலுக்கு பிரவேசிக்க வேண்டுமாயின் எல்லையற்ற வரபிரசாதங்கள் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.இலாபம் பெறுவதற்காகவே அரசியல்வாதிகள் அரசியல் செய்கிறார்கள்.
அரசியல் கட்சிகள் முழுமையாக அரச கணக்காய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும்.அரசாங்கத்தின் செலவுகள் அனைத்தும் ஒரு மையப்பகுதியில் சுயாதீனமான முறையில் கண்காணிக்கப்பட வேண்டும்.நாம் முன்வைத்துள்ள யோசனைளை செயற்படுத்த நிச்சயம் போராடுவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM