அரசாங்கத்திலிருந்து மேலும் பலர் வெளியேறுவர் - பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத்

Published By: Digital Desk 4

10 Apr, 2022 | 08:07 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு அரசாங்கம் ஜனநாயகம் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் தீர்வு காணாவிடின் அரசாங்கத்தில் இருந்து மேலும் பலர் வெளியேறுவார்கள்.

அரசியல்வாதிகளை காட்டிலும் மக்கள் ஜனநாயகம், அரசியல் துறை தொடர்பில் தெளிவாக உள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் பாரிய சூழல் மாசடைவை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது: சரித  ஹேரத் | Virakesari.lk

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் தற்போது காணப்படும் நிலைப்பாடு நியாயமானது. மக்களின் தேவைக்கமைய பதவி விலகிய அமைச்சரவை செயற்படவில்லை.

அரச நிர்வாக கட்டமைப்பிலும் பாரிய குறைப்பாடுகள் காணப்படுகின்றன என்பதை ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.

பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்ட மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் ஒன்றினைந்து வீதிக்கிறங்கியுள்ளார்கள்.

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு அரசாங்கம் ஜனநாயகம் மற்றும் தொழில்நுட்பம் ரீதியாகவும் தீரவு பெற்றுக்கொடுக்காவிடின் அரசாங்கத்திலிருந்து மேலும் பலர் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவார்கள்.

அரசாங்கத்திலிருந்து தொடர்ந்து பலர் வெளியேறுவது பொதுஜன பெரமுன கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.

அரசியல்வாதிகளை காட்டிலும் நாட்டு மக்கள் ஜனநாயகம் மற்றும் அரசியல் கட்டமைப்பு குறித்து மிக தெளிவாக உள்ளார்கள்.

மக்களின் நியாயமான போராட்டத்தை வௌ;வேறு மாறுப்பட்ட பெயர்களை குறிப்பிட்டு ஒருபோதும் முடக்க முடியாது.போராட்டத்தை முடக்க மாற்று வழிமுறைகளை கையாண்டால் அது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

திருட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள்...

2024-04-18 13:21:31
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24