கிண்ணியா - ஆலங்கேணி பகுதியில் ஏற்பட்ட மின் ஒழுக்குக் காரணமாக வீடு ஒன்று தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது
இச்சம்வம் இரவு 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிண்ணியா,ஆலங்கேணி,வள்ளுவர் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
திருமணம் முடிந்து நான்கு நாட்களான புதுப்மணத் தம்பதியினர் தமது (ஆலங்கேணி) வீட்டை விட்டு, மாமியார் வீடான மட்டக்களப்புக்குச் சென்றுள்ள அவ்வீட்டில் யாரும் இல்லாத போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அனைவரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
திருமணத்துக்கு , வாடகைக்கு எடுத்த தளபாடங்கள், பிளாஸ்டிக் கதிரைகள், மின்சார உபகரணங்கள், முதலான அனைத்து பொருட்களும் தீக்கிரையாகியுள்ளன.
அன்றைய தினம் மின் ஒழுக்கு ஏற்பட்டு வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர். பல இலட்சம் ரூபாய்ப் பெறுமதியான பொருட்கள் எரிந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
மின்சார ஒழுக்கு ஏற்பட்டு வீடு எரிந்த வேளையில் இலங்கை மின்சார சபை கிண்ணியா அலுவலகத்துக்கும் , கிண்ணியா பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.
இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
பெறுமதிமிக்க பொருட்கள் அழிந்துவிட்டது. அரசாங்கம் நஷ்டயீடு வழங்க வேண்டும் என வீட்டு உரிமையாளர்கள் உரிய அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM