தெவாட்டியா கடைசி 2 பந்துகளில் விளாசிய சிக்ஸ்களுடன் குஜராத் வெற்றி

By Digital Desk 4

09 Apr, 2022 | 10:22 AM
image

(என்.வீ.ஏ.)

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக மும்பை ப்ரேபோர்ன் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (08.04.2022) நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியின் கடைசி 2 பந்துகளில் ராஹுல் தெவாட்டியா விளாசிய சிக்ஸ்களின் பலனாக குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

Shubman Gill and Rahul Tewatia take a bow after their starring roles against Punjab Kings, Gujarat Titans vs Punjab Kings, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 8, 2022

இதன் மூலம் இந்த சுற்றுப் போட்டியில் தொடர்ந்தும் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக குஜராத் திகழ்கிறது.

பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயி த்த   190 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றது.

Ecstasy for Gujarat Titans, agony for Odean Smith and Punjab Kings, Gujarat Titans vs Punjab Kings, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 8, 2022

மொத்த எண்ணிக்கை 32 ஓட்டங்களாக இருந்தபோது மெத்யூ வேட் (6) ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஆனால் ஷுப்மான் கில்லுடன் ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் (35) 2ஆவது 101 ஓட்டங்களைப் பகிர்ந்து குஜராத்துக்கு நம்பிக்கை ஊட்டினார்.

மொத்த எண்ணிக்கை 170 ஓட்டங்களாக இருந்தபோது 19ஆவது ஓவரில் ஷுப்மான் கில் 3ஆவதாக ஆட்டமிழந்தார். அவர் 56 பந்துகளில் 11 பவுண்ட்கள், ஒரு சிச்ஸுடன் 96 ஓட்டங்களைப் பெற்றார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு மேலும் 18 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஓடின் ஸ்மித்தின் முதல் பந்தில் அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (27) அநாவசியமாக ரன் அவுட் ஆனார்.

டேவிட் மில்லர் அடுத்த 3 பந்துகளில் முறையே 1, 4, 1 என ஓட்டங்களைப் பெற கடைசி 2 பந்துகளில் மேலும் 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

Rashid Khan finished with figures of 4-0-22-3, Gujarat Titans vs Punjab Kings, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 8, 2022

ஓடின் ஸ்மித் வீசிய கடைசி 2 பந்துகளையும் தெவாட்டியா மிகவும் அலாதியாக சிக்ஸ்களாக்க, குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றியீட்டியது.

தெவாட்டியா 3 பந்துகளில் 13 ஓட்டங்களுடனும் டேவிட் மில்லர் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பந்துவீச்சில் கெகிசோ ரபாடா 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது.

Rashid Khan celebrates after picking up the wicket of Shikhar Dhawan, Gujarat Titans vs Punjab Kings, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 8, 2022

மயான்க் அகர்வால் (5), ஜொனி பெயார்ஸ்டோவ் (8) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டமிழந்ததால் குஜராத் தடுமாற்றம் அடைந்தது.

ஆனால், லியாம் லிவிங்ஸ்டோன் மிகவும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 27 பந்துகளில் 7 பவுண்ட்றிகள், 4 சிக்ஸ்கள் அடங்கலாக 64 ஓட்டங்களைப் பெற்று அணியின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்துக்கொடுத்தார்.

35 ஓட்டங்களைப் பெற்ற ஷிக்கர் தவானுடன் 3ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்த லியாம் லிவிங்ஸ்டோன், 23 ஓட்டங்களைப் பெற்ற ஜிட்டேஷ் ஷர்மாவுடன் 4ஆவது விக்கெட்டில் மேலும் 38 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

அதன் பின்னர் சீரான இடைவெளியில் 5 விக்கெட்கள் சரிய, 17.5 ஓவர்களில் பஞ்சாபின் மொத்த எண்ணிக்கை 162 ஓட்டங்களாக இருந்தது.

கடைசி 7 பந்துகளில் ராஹுல் சஹார், அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் 27 ஓட்டங்களைப் பெற்று மொத்த எண்ணிக்கையை 189 ஓட்டங்களாக உயர்த்தினர்.

ராஹுல் சஹார் 14 பந்துகளில் 22 ஓட்டங்களுடனும் அர்ஷ்தீப் சிங் 5 பந்துகளில் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

Rahul Tewatia tees off at the close, Gujarat Titans vs Punjab Kings, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 8, 2022

பந்துவீச்சில் ராஷித் கான் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தர்ஷன் நல்கண்ட் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right