பச்சிளம் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுமா..?

Published By: Digital Desk 4

08 Apr, 2022 | 07:04 PM
image

பிறந்த பச்சிளங்குழந்தைகள் முதல் 12 வயதுக்குட்பட்ட சிறார்கள் வரை வெவ்வேறு காரணங்களால் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இன்றைய திகதியில் தெற்காசிய நாடுகளில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்திருக்கிறது. குழந்தை பிறந்தவுடன் சர்க்கரை பாதிப்பு ஏற்படுவது, ஐந்து மாதத்திற்கு பிறகு நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவது, பிறந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவது.. என 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படும்.

பிறந்த குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு ஆயுள் முழுதும் சர்க்கரை நோயாளிகளாக இருப்பார் என்ற அவதானிப்பும் மக்களிடத்தில் இருக்கிறது. ஆனால் இது உண்மையல்ல ஏனெனில் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் வெவ்வேறு காரணங்களால் பாதிப்பு ஏற்படக்கூடும். அவை தற்காலிகமானதாகவும் இருக்கலாம். சிகிச்சை பெற்ற பிறகு முழுவதும் குணமடையலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, சில கிருமிகளின் தொற்று பாதிப்பு மற்றும் காய்ச்சல் காரணமாகவும் பிறந்த பச்சிளங்குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வரலாம். இதன் காரணமாக அனைத்து சர்க்கரை நோயும் பரம்பரை காரணமாக உண்டாகிறது என கூற இயலாது.

இது போன்ற தருணங்களில் குழந்தைகளுக்கு இன்சுலின்  வழங்குவதுதான் முதற்கட்ட முழுமையான நிவாரண சிகிச்சையாகும். ஏனெனில் குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் வளரும் தருணங்கள் என்பதால், அதன் வளர்ச்சியை பாதிக்காத வகையினதான இன்சுலினை பயன்படுத்த வேண்டும். இதற்காக குழந்தைகள் நல நிபுணரையும், சர்க்கரை நோய் நிபுணரையும் சந்தித்து ஆலோசனையும் அவர்களின் அறிவுரையையும் பெற்று சிகிச்சையைத் தொடர வேண்டும்.

குழந்தைகளுக்கு இன்சுலின் தேவையான அளவிற்கு வழங்கி அவர்களின் ரத்த சர்க்கரையின் அளவை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள இயலும். இதன் காரணமாக அவர்களின் சிறுநீரகம், கல்லீரல், கண் போன்ற உறுப்புகள் பாதுகாக்கப்படுகிறது.

டொக்டர் ராஜேஷ் கிருஷ்ணன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இதய பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பெண்களிடத்தில்...

2023-09-28 15:05:39
news-image

பெண்களுக்கு ஏற்படும் பிரத்தியேக சிறுநீர் கசிவு...

2023-09-27 15:30:10
news-image

இதயத்துடிப்பை சீராக வைத்துக் கொள்வதற்கான எளிய...

2023-09-26 17:14:05
news-image

உடற்பயிற்சியின் மூலம் வலிகளை குணப்படுத்துவோம் -...

2023-09-25 15:49:32
news-image

ஹலிடோசிஸ் எனும் வாய் துர்நாற்ற பாதிப்பிற்குரிய...

2023-09-25 12:36:36
news-image

மன அழுத்தத்தை குறைக்கும் டாக்கிங் தெரபி...

2023-09-23 15:38:51
news-image

கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

2023-09-22 13:05:56
news-image

பேறு காலத்தின் போது பெண்களுக்கு மார்பக...

2023-09-21 13:49:25
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பு பாதிப்பிற்குரிய...

2023-09-20 14:01:29
news-image

இடியோபதிக் இன்ட்ராகிரானியல் ஹைப்பர்டென்ஷன் எனப்படும் மூளை...

2023-09-19 17:09:39
news-image

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-09-18 14:21:13
news-image

நிபா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

2023-09-16 17:06:10