நாட்டுக்காகவும் மக்களுக்காவும் அரசாங்கம் விட்டுக்கொடுக்க வேண்டும் - ஹர்ஷ டி சில்வா

Published By: Digital Desk 4

08 Apr, 2022 | 05:32 PM
image

(ஆர்.யசி, இராஜதுரை ஹஷான்)

நாட்டின் நெருக்கடி நிலைமையை சமாளிக்க வேண்டும் என்றால் நிறைவேற்று அதிகாரத்தை நீக்க வேண்டும், ஆனால் அதற்கு இப்போது கால அவகாசம் இல்லை என்பதால் 20ஆம் திருத்தத்தை நீக்கி 19 ஆம் திருத்தத்தை கொண்டு வாருங்கள். 

Articles Tagged Under: பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா | Virakesari.lk

அதேபோல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எமக்கு தருவீர்கள் என்றால் நிலைமைகளை சமாளிக்க எம்மாலான முயற்சிகளை எடுப்போம் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சபையில் தெரிவித்தார். 

மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் 20 ஆம் திருத்தத்தை நீக்குங்கள். நிதி அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு ஒப்படையுங்கள், பாராளுமன்றம் மூலமாக இதனை கையாள்வோம் எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (8 ) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதா இல்லையா என்ற கொள்கை முரண்பாடொன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டும் என்பதே இன்று சகலரதும் கருத்தாக உள்ளது.

அதேபோல் கடன் மீள் கட்டமைப்பை கையாள வேண்டும். இவற்றை நீண்ட காலமாக நாம் கூறிக்கொண்டுள்ளோம். லெபனானை உதாரணமாக எடுத்துகொள்ள முடியும். அவர்களும் இதே போன்றதொரு நெருக்கடியையே சந்தித்தனர். 

ஆகவே இப்போது நாம் செய்ய வேண்டியதென்ன, முதலில் வருமானத்திற்கும் செலவுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க வேண்டும்.

வரி திருத்தங்களை மேற்கொண்டு வருமானத்தை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய வங்கியை ஒழுக்கமான செயற்படும் நிலைமைக்கு கொண்டுவர வேண்டும். 

நிதிச்சந்தையின் நிருவாகத்தை மீண்டும் கையில் எடுக்க வேண்டும்.  நாட்டில் ஆறு வீதமாக இருந்த கொள்கை வட்டி வீதத்தை இரண்டு மடங்காக  அதிகரிக்க வேண்டும், இப்போது 6.5 வீதமாக இருக்கின்ற கொள்கை வட்டி வீதத்தை 12-13 வீதமாகக வேண்டும். 

இல்லையேல் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை தடுக்க முடியாது. இது குறித்து ஆழமாக சிந்தியுங்கள், உடனடியாக இதனை நடைமுறைப்படுத்த முடியும் என்றால் அதுவும் ஆரோக்கியமானது.

ரூபாவுக்கான பெறுமதி வீழ்ச்சியை தடுக்க மாற்று வேலைத்திட்டம் கொண்டுவர வேண்டும். 320 ரூபாவிலாவது நிறுத்தியாக வேண்டும். இல்லையேல் வாழ்வாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும். நாட்டு மக்களுக்கு இருவேளை உணவு உண்ண முடியாதுள்ளது. 

குறைந்த வருமானத்தை பெற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்ட வேண்டும். 25 வீதமளவிலேனும் நாட்டின் வறுமை அதிகரித்திருக்கும்.

இன்று எம்மிடம் பணம் இல்லை, இந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் மார்ச் வரையில் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்களை செலுத்தியுள்ளோம். ஏப்ரல் மாதத்தில் 247 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது. 

மே மாதத்தில் 620 மில்லியன் டொலர் கடன்களை செலுத்த வேண்டியுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் 867 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்தியாக வேண்டும்.

இந்தியாவிடம் வாங்கிய பொருட்களுக்காக 1.4பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது.  இரண்டு பில்லியன் டொலர்களை இரண்டு மாதங்களுக்குள் செலுத்தியாக வேண்டும், ஆனால் அதற்கான பணம் எம்மிடம் இல்லை. ஆகவே உடனடியாக கடன் மீள் கட்டமைப்பை செய்தே ஆகவேண்டும். அதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றாக வேண்டும்.

இதனை கையாள வேண்டும் என்றால்  உறுதியான அரசாங்கம் ஆட்சியில் இருக்க வேண்டும். ஸ்திரமற்ற அரசாங்கத்தை வைத்துகொண்டு இவற்றை கையாள முடியாது, சர்வதேசத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளவும் முடியாது. ஆகவே தான் நிறைவேற்று அதிகாரத்தை நீக்க வேண்டும், 

இப்போது அதனை செய்ய முடியாது, எனவே 20ஆம் திருத்தத்தை நீக்கி 19 ஆம் திருத்தத்திற்கு வாருங்கள், எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தருவீர்கள் என்றால் எம்மால் ஏதேனும் ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நாம் தயாராக உள்ளோம். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற நிலைப்பாட்டில் இருக்க வேண்டாம். இப்போதய  நெருக்கடி நிலையில் அரசாங்கமேவிட்டுக்கொடுக்க வேண்டும். 

எனவே மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் 20 ஆம் திருத்தத்தை நீக்குங்கள். நிதி அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு ஒப்படையுங்கள், பாராளுமன்றம் மூலமாக இதனை கையாள்வோம். அதற்கு நாம் தயராகவே உள்ளோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46