அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அட்டனில் அரச ஊழியர்கள் போராட்டம்!

Published By: Digital Desk 4

08 Apr, 2022 | 03:51 PM
image

அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உணவு ஓய்வு நேர வேளையில் அட்டன் பிரதேசத்தில் உள்ள அரச ஊழியர்கள் அட்டன் மணிக்கூட்டு கோபுரத்த்திற்கு முன்பாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்வி துறைசார்ந்த ஊழியர்கள், தபால் திணைக்கள ஊழியர்கள், டிக்ககோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் தாதியர்கள், வைத்தியர்கள் சிற்றூழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கல்வி மற்றும் ஏனைய அரச ஊழியர்கள்களின் ஆர்ப்பாட்டம் ஹட்டன் டிக்கோயா நகர சபைக்கு முன்பாக ஆரம்பித்தது. ஆர்ப்பாட்டகாரர்கள் உலகத்தின் முன் தாய் நாட்டை கேவலமாக்காதே, பசிக்கு நிறம், மதம் கிடையாது,விலை குறை அடுத்த தலைமுறை வாழ வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை காட்சி படுத்திய வண்ணம், ஊர்வலமாக வந்து மணிக்கூட்டு கோபுரத்தின் முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், சிற்றூழியர்கள் உட்பட வைத்தியசாலையில் பணிபுரியம் ஊழியர்கள் டீசல் இல்லை,கவலைக்கிடமான நிலையில் இலவச சுகாதார  சேவை, சுகாதார சேவையை பாதுகாப்போம்,பிள்ளைகளின் கல்வியினை பாதுகாப்போம். போன்ற வாசகங்களை எழுத்திய சுலோக அட்டைகளை ஏந்திய வண்ணம், கோசமிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எந்த அரசாங்கமும் முயற்சியை...

2023-09-24 19:30:52
news-image

அலி சப்ரி ரஹீம் தொடர்பில் ஏன்...

2023-09-24 19:44:10
news-image

கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்காக சீன அரசாங்கத்தின் உதவியுடன்...

2023-09-24 19:10:51
news-image

மாகாண அதிகாரம் மத்திக்கு : ஆளுநர்...

2023-09-24 19:31:50
news-image

மன்னாரில் நடைபெறவிருந்த தேசிய மீலாத்துன் நபி...

2023-09-24 19:32:58
news-image

ஏமாற்றமளித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின்...

2023-09-24 19:49:13
news-image

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரப்படக்கூடாது...

2023-09-24 19:52:19
news-image

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை வலுவடைந்துள்ளது...

2023-09-24 19:52:41
news-image

வலுவானதும் சுபீட்சமானதுமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஒத்துழைப்பு...

2023-09-24 19:53:15
news-image

மட்டக்களப்பில் டெங்கு நோய் தீவிரம் :...

2023-09-24 17:35:26
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திருட்டில் ஈடுபட்ட ...

2023-09-24 16:57:18
news-image

மட்டு. ஷரிஆ பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு இலங்கை...

2023-09-24 16:42:45