அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் - அநுரகுமார திஸாநாயக்க

08 Apr, 2022 | 11:19 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களை மேலும் தீவிரப்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி முழுமையான ஆதரவை வழங்கும். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலககும் வரை ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (8 )நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டில் தற்போது பணவீக்கம் 20 சதவீதமாகக் காணப்படுகிறது, எதிர்வரும் 6 மாதங்களுக்குள் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் , இது 56 சதவீதம் வரை உயர்வடையக் கூடும் என்று சர்வதேச பொருளாதார நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. 

அது மாத்திரமின்றி பணவீக்கம் அதிமாகக் காணப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை 6 ஆவது இடத்தை பிடிக்கக்கூடும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைய ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்பதை தொடர்ச்சியாக தெரிவித்து வந்தார். 

டொலரின் பெறுமதியை 200 ரூபாவாகப் பேணுவதற்காக மத்திய வங்கி வசம் காணப்பட்ட சுமார் 5 பில்லியன் டொலரை சந்தைக்கு விடுவித்தார்.

8 பில்லியன் டொலர் இருப்பினை பாதுகாத்திருந்தால் நாட்டில் இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. 

அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட இந்த நெருக்கடிகளுக்கான பொறுப்பை அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை ஜனாதிபதி உணர வேண்டும் ஆனால், ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ இதனைப் புரிந்து கொள்வதற்கு தயாராக இல்லை.

இந்த நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு தேசிய மக்கள் சக்தி என்ற அடிப்படையில் தீக்கமானதொரு வேலை திட்டத்தினை முன்வைப்போம். ஜனாதிபதியும் , அரசாங்கமும் பதவி விலகிய பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். 

அதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் புதிய ஆட்சி அமைக்கப்படும் வரையில் இடைக்கால நிர்வாகத்திற்கான யோசனைகள் அனைத்து தரப்பினரிடமிருந்தும் கோரப்படும். 

இதனை செய்வதற்கு ஜனாதிபதியும் இந்த அரசாங்கமும் பதவி விலக வேண்டும். 

அவர்கள் பதவி விலகும் வரை தற்போது முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும். 

இதற்காக பொது மக்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு தேசிய மக்கள் சக்தி முழுமையான ஆதரவை வழங்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38