Published by T. Saranya on 2022-04-08 15:16:32
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து 43 நாட்களாகி விட்டன.
இந்நிலையில் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் முன்பு சிவப்பு நிறத்தில் உள்ள குளத்தில் இறங்கி பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் ரஷ்யப் படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட கீவ் பகுதியில் 410 பொதுமக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக உக்ரேன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் இரத்தத்தை குறிக்கும் வகையில் சிவப்பு நிறத்தில் உள்ள குளத்தில் சில பெண்கள் இறங்கி போரட்டம் நடத்தினர்.

அப்போது போரில் மக்கள் கொல்லப்பட்டதை நினைவுபடுத்தும் வகையில் இறந்து கிடப்பது போல் நடித்து ரஷ்யாவிற்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.
