ராஜபக்ஷ குடும்பம் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் பொறுப்புக்களை ஏற்கத் தயார் - பிரதான எதிர்க்கட்சி

08 Apr, 2022 | 11:01 PM
image

(ஆர்.யசி, இராஜதுரை ஹஷான்)

நாட்டின் நெருக்கடி நிலைமைக்கு ஜனாதிபதியும், பிரதமருமே பிரதான காரணமாகும். 

கோட்டாபய வெளியேறு என்பதே இன்று நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கோஷமாக மாறியுள்ளது,

ஆகவே ஜனாதிபதியும் ராஜபக்ஷ குடும்பத்தினரும் இந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் நாம் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு பிரச்சினைகளை தீர்க்க முன்வருவோம் என பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக சபையில் தெரிவித்ததுடன், ஜனாதிபதியை பதவி நீங்குமாறு சபாநாயகரேனும் எடுத்துக்கூறி, பிரச்சினையை தீர்க்க இடமளிக்குமாறு தெளிவுபடுத்துங்கள் எனவும் வலியுறுத்தினர்.

பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை (9) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய வேளையில் அரசாங்கத்தின் மீதான அதிருப்தியையும், மக்களின் கோரிக்கை என்ன என்பதையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் முன்வைத்தனர்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய 

அஷோக அபேசிங்க எம்.பி :- இந்த அரசாங்கமே நாட்டின் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியது, உருவாக்கியது மட்டுமல்ல அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் அதனை சரிசெய்ய முடியாத அளவிற்கு நாட்டை நாசமாக்கியுள்ளனர். 

நாட்டை நாசமாக்கியவர்கள் இன்று நெருக்கடிகளை சமாளிக்க எம்மையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என கூறுகின்றனர். 

ராஜபக்ஷவினரை வெளியேற்ற வேண்டும் என ஒட்டுமொத்தமாக மக்கள் கூறுகின்றனர். 

ராஜபக்ஷவினர் இல்லாத அரசாங்கத்தை எம்மால் நடத்த முடியும், ஆகவே ராஜபக்ஷ குடும்பத்தினரே இந்த அரசாங்கத்தில் இருந்து நீக்கினால் நாம் பொறுப்புகளை எடுத்துக்கொண்டு பிரச்சினைகளை தீர்க்க முன்வருவோம் என்றார்.

அஜித் மானப்பெரும எம்.பி :-  நன்றாக பயணித்துக்கொண்டிருந்த நாட்டை இந்த அரசாங்கம் நாசமாக்கியுள்ளது.

மக்களின் குரலுக்கு அரசாங்கம் செவி மடுத்து கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் இருந்து வெளியேறுவாராக இருந்தால் இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு நாட்டை மீட்டெடுக்க ஒன்றிணைய நாம் தயாராக உள்ளோம். 

அதற்கு முதல் கோட்டாபய வீட்டுக்கு செல்ல வேண்டும், ராஜபக்ஷ குடும்பபே ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும், அவர்கள் கொள்ளையடித்த சகல பணத்தையும் சேர்த்துக்கொண்டு நாட்டை மீட்டெடுக்க நாம் தயார் என்றார்.

ஹெஷா விதானகே எம்.பி :-  பாராளுமன்ற உறுப்பினர்களினால் மக்களை சந்திக்க பாரிய அச்சம் ஏற்பட்டுள்ளது. 

எனவே இவ்வாறான நிலையில்  கோட்டாபய ராஜபக்ஷவினால் இனியும் மக்களின் மனநிலையை விளங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் சபாநாயகராவது நிலைமைகளை ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறி மாற்று வேலைத்திட்டம் ஒன்றினை கையாள முயற்சியுங்கள் என்றார்.

சமிந்த விஜயசிறி எம்.பி :-  மக்களை சந்திக்க முடியாத காரணத்தினால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளார், ஆனால் சட்ட பூர்வமாக எந்தவொரு அமைச்சரும் பதவி விலகவில்லை.

அதேபோல் ஜனாதிபதியும் பிரதமருமே இன்று நாட்டின் பிரதான பிரச்சினையாகும், ஆகவே அவர்களை இருவரையும் நீக்கினால் மட்டுமே பிரச்சினைகளை தீர்க்க எம்மால் தலையிட முடியும். 

இவர்கள் இருவரையும் அதிகாரத்தில் வைத்துக்கொண்டு தீர்வு காண முடியாது, ஆகவே சபாநாயகராவது தலையிட்டு இந்த பிரச்சினைகளை தீர்க்க ஏற்பாடுகளை செய்துதர வேண்டும் என்றார்.

நளின் பண்டார :-  கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும் வரையில் நாடு நாளுக்கு நாள் வீழ்ச்சியை சந்திக்கும். நாம் யாரும் பாராளுமன்றத்தில் இல்லாத வேளையில் ஜனாதிபதி வீரர் போன்று சபைக்கு வந்து செல்கின்றார். 

அவர் தைரியமான நபர் என்றால் இன்று ஒரு ஐந்து நிமிடங்கள் சபைக்கு வந்துகாட்ட வேண்டும், ஆகவே கோட்டாபய ராஜபக்ஷவை நீக்காது தீர்வு காண முடியாது. எனவே அவரை நீக்கிவிட்டு தீர்வு குறித்து ஆராய்வோம் என்றார்.

முஜிபூர் ரஹ்மான் எம்.பி :- நாட்டின் நிலைமை என்ன என்பது சகலருக்கும் தெரியும், சிங்கள தமிழ் புத்தாண்டு வருகின்றது, மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. 

நாட்டின் சகல மக்களும் கோட்டா வீட்டுக்கு போ என்ற கோஷத்தை எழுப்புகின்றனர் அமெரிக்காவில் உள்ள மக்கள் கோட்டா வீட்டுக்கு வா என கோஷம் எழுப்புகின்றனர், ஆகவே ஜனாதிபதியை பதவி நீங்குமாறு சபாநாயகரேனும் எடுத்துக்கூறுங்கள் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42
news-image

பிரித்தானியா தடை விதிப்பு : தமிழ்...

2025-03-25 17:00:47
news-image

வடக்கு அபிவிருத்திக்கு வனவளத் திணைக்களம் மற்றும்...

2025-03-25 22:03:43