(என்.வீ.ஏ.)
டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக மும்பை டி.வை. பட்டில் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 2 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் 2 ஆம் இடத்துக்கு லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் முன்னேறியுள்ளது.
டெல்ஹியுடனான போட்டியில் குவின்டன் டி கொக் குவித்த அரைச் சதம் லக்னோவின் வெற்றியில் பிரதான பங்கு வகித்தது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.
சிரேஷ்ட வீரர் ப்ரித்திவ் ஷா 34 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்ட்றிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 61 ஓட்டங்களைக் குவித்ததுடன் டேவிட் வோர்னருடன் ஆரம்ப விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
ரிஷாப் பன்ட் 39 ஓட்டங்களுடனும் சர்பராஸ் கான் 36 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். ஆனால் அவர்களது துடுப்பாட்டத்தில் வேகம் போதுமானதாக இருக்கவில்லை. அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 57 பந்துகளில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
பந்துவீச்சில் ரவி பிஷோனி 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ 19.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
கே.எல். ராகுல் (24 ஓட்டங்கள்), குவின்டன் டி கொக் ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் 58 பந்துகளில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
ராகுல் ஆட்டமிழந்த சொற்ப நேரத்தில் எவின் லூயிஸ் 5 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
குவின்டன் டி கொக் 52 பந்துகளில் 9 பவுண்ட்றிகள், 2 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களைப் பெற்று 3ஆவதாக ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து தீப்பக் ஹூடா (11), க்ருணல் பாண்டியா (19 ஆ.இ.), அயுஷ் படோனி (3 பந்துகளில் 10 ஆ.இ.) ஆகியோர் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி லக்னோவின் வெற்றியை உறுதிசெய்தனர்.
பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இந்த வருட ஐபிஎல்லில் இதுவரை நடைபெற்ற 15 போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் மாத்திரமே தோல்வி அடையாத அணியாக இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM