அரசாங்கத்தின் செயற்பாடுகளை டி.எம். சௌந்தர்ராஜனின் பாடலில் சித்தரித்த வடிவேல் சுரேஷ்

Published By: Digital Desk 3

08 Apr, 2022 | 11:44 AM
image

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்றத்தில் நேற்று நாட்டின் நெருக்கடி நிலை தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தில் டி.எம். சௌந்தர்ராஜன் பாடிய எம்.ஜி.ஆர்,. பாடல் ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சபையில் பாடியதுடன் சபைக்குதவாத வார்த்தைகளினால் அரசையும் விமர்சித்தார்.

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் மலையக மக்கள் சார்பாக பேச முன்னர் ஒரு பாடலை பாட விரும்புவதாக கூறிய அவர், எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே,,, சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்.. சமயம் பார்த்து பல  வகையிலும் கொள்ளை அடிக்கிறார்.... என்று பாடினார்.

அதன் பின்னர் உரையாற்றிய அவர்,

பாமர மக்களை வலையிலே மாட்டி அவர்களை ஏமாற்றி பல வாக்குறுதிகளை அளித்து இந்த நாட்டு மக்களை வீதிக்கு இழுத்தெடுத்த பெருமை இந்த அரசுக்குள்ளது. மலையக மகளைப்பொறுத்தவரையில் இரட்டிப்பு ஏமாற்றம். தேர்தல் மேடைகளில் மலையகத்துக்கு பல்கலைக்கழகம் தருகின்றோம், நாளொன்றுக்கு  1,000 ரூபா சம்பளம் தருகின்றோம் எல்லாம் தருகின்றோம் என்று சொல்லிவிட்டு ஒன்றைக் கூடக் கொடுக்கவில்லை.  மக்களை ஒட்டு மொத்தமாக வீதிக்கிறக்கிய கேவலமான நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி விலக  மாட்டார். அரசு விலகாது,பிரதமர் விலக மாட்டார் என்று கூறுகின்றனர். ஆனால் இன்று நாட்டு மக்கள் என்ன கூறுகின்றனர். மாற்றம் தேவை என மக்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறுவதுதான் தீர்ப்பு. நாட்டின் அரசியல் சின்னங்கள், வண்ணங்கள் வேறு வேறாக இருந்தாலும் மக்களின் எண்ணங்கள் ஒன்றாகவிருக்கினறது. அந்த நோக்கத்துக்கு கௌரவமளிக்க வேண்டும். 

அரசியல்வாதிகள் மக்களின் தலைவர்கள் என்றால் இந்த மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் . இந்த நாட்டு மக்கள் சும்மா வீதிக்கிறங்குவதற்கு அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்துள்ளது?

அரசின் கேவலமா நிர்வாகம், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை என்றுமில்லாதவாறு   பசி, பட்டினி, வறுமை ஏற்பட்டுள்ளது. மலையக மக்களை இந்த அரசு மிக மோசமாக ஏமாற்றியுள்ளது. இந்த நாட்டில் தொழில் அமைச்சர் இல்லை. 

நிதி அமைச்சர் இல்லை. நீதி அமைச்சர் இல்லை. இங்கு என்ன நடந்து கொண்டிருக்கின்றது? எமது மக்களை ஏமாற்றிய சாபம் தான் இது. கப்பலில் தப்பி செல்ல எமக்கு கடலும் இல்லை விமானத்தில் ஏறிச்செல்ல எமக்கு விமான நிலையமும் இல்லை. மலையகம் எமது தாயகம், இங்குதான் பிறந்தோம் இங்குதான் இறப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04