கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்றோருக்கு பரிசளிப்பு

By Digital Desk 4

08 Apr, 2022 | 01:38 PM
image

போதைப் பாவனையை  கட்டுப்படுத்த அல்லது இல்லாதொழிக்க இரு வழிகளை கையாளுகின்றனா்.

ஒன்று தேவையைக் குறைத்தல் [DEMAND REDUCTION] மற்றயது வழங்கலைக் குறைத்தல் [SUPPLY REDUCTION].

தேவை இல்லையேல் வழங்கல் ஒழிந்தே போகும். இதனைக் கருத்திற்கொண்டு போதைப் பொருட் பாவனையால் ஏற்படும் எதிர்மறை விளையுகளை இளைய தலை முறைக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் தொடா் நிகழ்ச்சிகளை சர்வதேச  சிங்கசமாஜம் பிராந்தியம் -306A2 1993/94ம் ஆண்டுகளில் ஆரம்பித்து தொடா்ந்தும் இன்று வரை நாடாத்தி வருகின்றமை குறிப்பிடதக்கது.

இந்நிகழ்ச்சித் தொடரில் ஒன்றான அகில இலங்கை கட்டுரைப் போட்டி 28 ஆவது வருடமாக இந்த வருடமும் நடாத்தி அப்போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசில்கள் வழங்கும் விழா கடந்த  20 ஆம் திகதி வித்தியா மாவத்தை கொழும்பு 07 இல் உள்ள சிங்கசேவை மத்திய நிலையத்தில் சிறப்புற நடைபெற்றது.

 பிரதம விருந்தினா் சிங்காதிபதி லயன் புத்திக ரத்நாயக PMJF, MAF இடம் இருந்து பதக்கத்தை பெறும் மாணவியும் அருகில் Dr. சரத் சமரகே, றோட்டோியன் கிஷானி ஜயசிங்க,லயன் எஸ்.இராமச்சந்திரன் நிற்பதையும் காணலாம்.

“போதைப் பொருட் பாவனையும் அதன் பாரிய பாதிப்புகளும் ”என்ற தலைப்பில் மும்மொழிகலும் 15-19 வயதிற்கு இடைப்பட்ட பாடசாலை மாணவ மாணவிகளுக்காக நடைப்பெற்ற இப்போட்டியில் ஒவ்வொரு மொழிகலும் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற வெற்றியாளா்களுக்கு தலா ரூபா 12500 ரூபா 10000 ரூபா 7500 ரூபா 5000 ரூபா 2500 என பணப்பாிசில்கள் சான்றிதழ்கள் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

தொடா்ந்தும் 28 வருடங்களாக இத்தொடர் நிகழ்ச்சிகளை முன்னிண்று செயற் படுத்திவரும் பிராந்திய இணைப்பாளா் லயன் எஸ்.இராமச்சந்திரன் ஏற்பாடு செய்த இப் பாிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக சிங்காதிபதி லயன் புத்திக ரத்நாயக PMJF,MAF கலந்து சிறப்பித்தார்.

அவருடன் Dr.சரத் சமரகே [WHO],திரு.ரவிகந்தையா[FISD],திரு குமார் நடோசன் தலைவா் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பா்ஸ் ],திரு.செந்தில் நாதன் பிரதம நிறைவேற்று அதிகாாிஎக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பா்ஸ் pcc லயன் துமிந்த முனசிங்க MJF கொழும்பு மிட்சசிற்றிறோட்டறி கழகத் தலைவி Rtn.PHF கிஷானி ஜயசிங்க லயன் பிரமோட் விமலதுங்க தலைவா் தெகிவளை வடக்கு சிக சமாஜம் லயன் தலித பியசேன பொருளாளா் ஓய்வு நிலை சுங்கப் பணிப்பளா் தா்மசேன கஹந்தவ ஆகிய பிரமுகா்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

வேற்றிபெற்றோா் விபரங்கள் பின்வருமாறு

சிங்கள மொழியில்

1.செல்வி. AG உதார நெத்மி கருணாரத்ன-புஸ்பதான மகளீா் கல்லூாி,கண்டி

2..செல்வி.T.A.G.பியுமிசாமிக்கா குணவா்த்தன,வீர கெப்பிற்றிபொல,மத்தய கல்லூாி அகுறம்பொட,

3.செல்வி.K.G.S. நிசன்சலா லக்சானி கொலம்பகே, வீர கெலம்பகே,வீர கெப்பிற்றிபொல,மத்தய கல்லூாி அகுறம்பொட,

4.செல்வி.D.G.U.D.ஜயவீர மயுராபத ,மத்தய கல்லூாி ,நாரம்மல

5.செல்வன். சாமோட் துஷான் விதானகே,புனித சில்வெஸ்டா் கல்லூாி,கண்டி

தமிழ் மொழியில்

1.செல்வி.ஜஸ்டின் வயலட் தெரசிற்றா,புனித சேவியா் கல்லூாி.மன்னாா்.

2.செல்வி.சிவராசா மாிய நிலானி ஹோலி பெமிலி கொன்வன்ட்,யாழ்ப்பாணம்.

3.செல்வி.கபிஷா பரசுதன்,புனித மோி தமிழ் மஹா வித்தியாலயம்,கொழும்பு-4

4.செல்வி.லக்சாயினி சிறிவரதன்,கொக்கவில் இந்துக் கல்லூாிகொக்கவில் 

5.செல்வி.எம்.எச்.முகமுதா,சகீரா மகா வித்தியாலய வத்தளை.

ஆங்கில மொழியில்

1.செல்வி.மொகமட் சீனத் சௌசானா,மீரா பெண்கள்கல்லூாி,காத்கான்குடி

2.செல்வன்.சிவகனேசன் அனந்தகன்,ஹாட்லி கல்லூாி,பருத்தித்துறை

3.செல்வி.ரதிஷா பரத்தினேஷ்,வவுனியா  தமிழ் மஹா வித்தியாலயம்,வவுனியா.  

4.செல்வி.E.R.G.R.E.ராஜபக் ஷ,நுகவெல மத்திய கல்லூாி,நுகவெல.

5.செல்வி. தேஜஸ்வி பாமுருகன்,ஸ்ரீ சண்முகா இந்து மகளீா் கல்லூாி,திருகோணமலை.

பின் பாிசையில் தமிழ் மொழியி்ல் பாிசுபெற்ற மாணவியளுடன் PCC லயன் துமிந்த முனசிங்க, தெகிவளை வடக்கு சிங்க சமாஜ தலைவா் லயன் பிலமோட் விமலதுங்க, ஓய்வு நிலை சுங்க பணிப்பாளா் தா்மசேன கஹந்தவ,முன் வரிசையில் திரு. ரவிகந்தயா,Drசரத் சமரகே,சிங்காதிபதி லயன் புத்திக ரத்நாயக,லயன் எஸ்.இராமச்சந்திரன் றோட்டோியன் கிஷானி ஜயசிங்க,Dr.முருகானந்தன் அமா்ந்திருபதையம்  காணலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right