கொழும்பு - ஆமர் வீதியில் போதைப்பொருட்களுடன் சிக்கிய இந்தியர் 

Published By: Digital Desk 4

07 Apr, 2022 | 08:43 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு - ஆமர் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த  கார் ஒன்றினை மறித்து அதிரடியாக சோதனைச் செய்த கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய சிறப்பு குழுவினர்,  போதைப் பொருட்களை கடத்திக்கொண்டிருந்த இந்தியர் ஒருவரைக் கைது செய்தனர். 

வியாழக்கிழமை ( 7) காலை இச்சம்பவம் இடம்பெற்றதை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவவும் உறுதி செய்தார்.

 25 வயதான, வத்தளை பகுதியில் தற்காலிகமாக தங்கியிருக்கும்  இந்தியர் ஒருவரே இவ்வாறு காரை மறித்து முன்னெடுத்த அதிரடி சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காருக்குள் 18 பொதிகளில் சூட்சுமமாக  பொதி செய்யப்பட்டிருந்த  ஒன்றரைக் கிலோ ஹஷீஸ் போதைப் பொருளினையும் அரைக் கிலோ ஐஸ் போதைப் பொருளினையும் பொலிஸார் கைப்பற்றினர்.

 பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட இந்த விஷேட சுற்றி வளைப்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து,  மனித உரிமைகள் நிறுவனம் ஒன்றின் ஊடகப் பிரிவின் அதிகாரி என காண்பிக்கும் வண்ணமான அடையாள அட்டை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

அந்த டையாள அட்டையைப் பயன்படுத்தியே சந்தேக நபர் போதைப் பொருளினை கடத்திச் செல்கின்றமை தொடர்பில் தகவல்கள் வெளிபப்டுத்தப்பட்டுள்ள நிலையில், அவ்வடையாள அட்டையின் உண்மைத் தன்மை தொடர்பில்  மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 குறித்த போதைப் பொருளினை சந்தேக நபர் பெற்றுக்கொண்ட இடம், அவர் யாருக்கு வழங்க எடுத்துச் சென்றார் இந்த போதைப் பொருள் வலையமைப்பு யாரால் நடாத்திச் செல்லப்டுகிறது உள்ளிட்ட விடயங்களை  கண்டறிய விஷேட விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46